உங்களுக்கு நிச்சயம் இந்த ருசியான பிரட் பர்பி பிடிக்கும்… இன்றே செய்து பாருங்கள்!!!

Author: Udayachandran
2 October 2020, 10:55 am
Bread Burfi - Updatenews360
Quick Share

பிரட் வைத்து பல விதமான தின்பண்டங்களை செய்யலாம். இன்று நாம் பார்க்க இருப்பது ருசியான  பிரட் பர்பி. இது ஒரு அருமையான ஸ்னாக்ஸ் ரெசிபி. அனைவரும் விரும்பும் சுவையில் இருக்கும் இந்த பிரட் பர்பியை எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க…

தேவையான பொருட்கள்:

பிரட் தூள்- 2 கப்

பால்- 1 1/2 கப்

தேங்காய் துருவல்- 1 கப்

நெய்- 1/2 கப்

சர்க்கரை- 1 கப்

முந்திரி பருப்பு- 15

உலர்ந்த திராட்சை- 15

ஏலக்காய் தூள்- 1/4 தேக்கரண்டி

செய்முறை:

பிரட் பர்பி செய்வதற்கு முதலில் பிரட் தூள் தயார் செய்து கொள்ளலாம். அதற்கு பிரவுன் பிரட் துண்டுகளை எடுத்து அதன் ஓரங்களை வெட்டிய பிறகு மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்து கொள்ளவும். நமக்கு இரண்டு கப் பிரட் தூள் தேவைப்படும். ஒரு கிண்ணத்தில் இரண்டு கப் பிரட் தூளுடன் 1 1/2 கப் பால் சேர்த்து பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும். 

ஒரு கடாயில் இரண்டு தேக்கரண்டி நெய் ஊற்றி ஒரு கப் ஃபிரஷான தேங்காய் துருவல் சேர்த்து மூன்று நிமிடங்கள் வறுத்து கொள்ளவும். தேங்காய் ஓரளவு வதங்கியதும் ஒரு கப் சர்க்கரை சேர்த்து வதக்கவும். சர்க்கரை கரையும் வரை வதக்கவும். இப்போது நாம் கலந்து வைத்த பிரட் மற்றும் பால் கலவையை சேர்த்து கிளறுங்கள். 

பால் நன்றாக சுண்டும் வரை கிளற வேண்டும். 1/4 தேக்கரண்டி ஏலக்காய் பொடியையும் சேர்த்து கிளறவும். இரண்டு தேக்கரண்டியில் இருந்து 1/4 கப் வரை நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றவும். நறுக்கிய முந்திரி பருப்பு மற்றும் உலர்ந்த திராட்சை பழத்தை சேர்த்து கொள்ளலாம். பொருட்கள் அனைத்தும் சேர்ந்து தங்க நிறம் கிடைத்தவுடன் அடுப்பை அணைத்து விடலாம். 

ஒரு தட்டில் நெய் தடவி கலவையை இதில் கொட்டி கொள்ளுங்கள். இதனை இரண்டு மணி நேரம் குளிர்சாதன பெட்டியில் வைத்து எடுக்கவும். துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.

Views: - 50

0

0