கள்ளக்காதலை கண்டித்த கணவன்… கொன்று வாழைக்கு உரமாக்கிய மனைவி.. விசாரணையில் அதிர்ந்து போன போலீசார்..!!

Author: Babu Lakshmanan
30 May 2022, 11:20 am
Quick Share

கடலூர் : கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்று வாழை தோப்பில் புதைத்த 9 மாதமாக நாடகமாடிய மனைவியை, போலீஸார் நேற்று கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு அடுத்துள்ள எஸ்.புதுக்குப்பம் கிராமத்தில் வசித்து வந்தவர் கி.அய்யர் என்ற ராஜசேகர் (47) விவசாயி. இவர், தனது சகோதரியின் மகள் விஜயலட்சுமியை (40) கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ராஜசேகர் அடிக்கடி சண்டை போட்டுக்கொண்டு வெளியூர் சென்று விடுவாராம்.

இந்நிலையில், கடந்த 9 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டுச் சென்றவர் வீடு திரும்பவில்லையாம். எனவே, பல மாதங்களாக ராஜசேகர் குறித்த தகவல் தெரியாத நிலையில், விஜயலஷ்மியின் தம்பி சிவகுமார் விசாரித்துள்ளார். அப்போது, ராஜசேகரை கொலை செய்து வாழைத்தோப்பில் புதைத்து விட்டதாக கூறி விஜயலஷ்மி அதிர்ச்சியளித்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த பண்ருட்டி சரக துணை கண்காணிப்பாளர் சபியுல்லா, நெல்லிக்குப்பம் காவல் ஆய்வாளர் அசோகன் ஆகியோர் வருவாய்த்துறையினருடன் சென்று வாழைத் தோட்டத்தை பார்வையிட்டனர். பின்னர், விஜயலட்சுமியை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது விஜயலட்சுமி கூறியதாவது :- கணவர் ராஜசேகர் அடிக்கடி சண்டை போட்டுக்கொண்டு வெளியூர் சென்று விடுவார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. இதனை கணவர் ராஜசேகர் கண்டித்து வந்தார். கடந்த 9 மாதத்திற்கு முன்னர் ஏற்பட்ட பிரச்னையின் போது, நானும், மோகனும் சேர்ந்து ராஜசேகரை கொலை செய்து அவருக்கு சொந்தமான வாழைத் தோப்பில் சடலத்தை புதைத்தோம். தம்பி சிவக்குமார், ராஜசேகர் மாயமானது குறித்து அடிக்கடி கேட்டு வந்த நிலையில் உண்மையை கூறி விட்டேன், என்று அவர் கூறினார்.

Views: - 490

0

0