பலியானோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்

4 December 2019, 11:14 pm
Modi Speech-UpdateNews360
Quick Share

டெல்லி: சூடான் நாட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் பலியானவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், சூடானில் ஒரு தொழிற்சாலையில் குண்டுவெடிப்பில், சில இந்திய தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர், சிலர் காயமடைந்துள்ளனர். இந்த செய்தியைக் கேட்டு நான் மிகவும் வேதனை அடைந்தேன்.தங்கள் சொந்தங்களை இழந்து துயரமடைந்துள்ள குடும்பத்தினருக்காகவும், காயமடைந்தவர்களுக்காகவும் நான் பிரார்த்தனை செய்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் எங்கள் தூதரகம் வழங்கி வருகிறது என பதிவிட்டுள்ளார்.