தனுஷின் பெயரை நீக்காமல் இருக்கும் ஐஸ்வர்யா..? காரணம் என்ன..?

Author: Rajesh
2 February 2022, 7:09 pm
Quick Share

சமீபத்தில், தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும், பிரிவதாக ட்விட்டரில் பதிவு ஒன்றினை ஒன்றாக வெளியிட்டிருந்தனர். இருவரும் இதற்கான காரணம் என்னவென்று கூறாமல் இருந்து வரும் நிலையில், சமூக வலைதளங்களில் பல காரணங்கள் பரவி வருகின்றன.
ஐஷ்வர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், Corona தொற்று உறுதி செய்யப்பட்டு, Hospital-ல படுத்த படுக்கையாக இருக்கிறார். மேலும், ‘ இன்னும் இந்த வருஷத்துல என்னென்ன எல்லாம் எனக்கு நடக்கப் போகுதோ?..’ என்று Caption போட்டுள்ளார்.

கணவரின் பிரிவினை அறிவித்த பின்பு எந்தவொரு பதிவும் போடாத ஐஸ்வர்யா, நேற்று தான் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக போஸ்ட் ஒன்றினை வெளியிட்டார்.
இந்நிலையில் ஐஷ்வர்யா, சோஷியல் மீடியாவில் தனது பெயரின் பக்கத்தில் இருக்கும் தனுஷின் பெயரை நீக்காமல் இருந்து வருகின்றார். இதனால் விரைவில் இருவரும் ஒன்று சேர்ந்துவிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Views: - 832

1

1