விரைவில் மத்தியில் திராவிட மாடல் ஆட்சி… அடித்து சொல்லும் திமுக எம்பி டி.ஆர். பாலு!!

Author: Babu Lakshmanan
19 May 2022, 6:23 pm
Quick Share

சென்னை : விரைவில் மத்தியில் திராவிட மாடல் ஆட்சி நடைபெறும் என்று திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சியமைத்தது. இந்த ஆட்சி திராவிட மாடல் ஆட்சி என்று திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் கூறி வருகின்றனர். திமுகவின் திட்டங்களை திராவிட மாடல் அடையாளமாக காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை ஆதம்பாக்கத்தில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் திமுக எம்.பி. டி.ஆர். பாலு பேசுகையில், “திராவிட மாடல் என்பது மாநில சுயாட்சி. அந்த மாநில சுயாட்சி கொள்கையோடு சமூக நீதியும் இணைந்தது தான் திராவிட மாடல். விரைவில் மத்தியில் திராவிட மாடல் ஆட்சி அமையும். மாநில சுயாட்சி கிடைக்கும்,” என தெரிவித்துள்ளார்.

அவரது இந்தக் கருத்திற்கு நெட்டிசன்கள் ஆதரவாகவும், எதிராகவும் பேசி வருகின்றனர்.

Views: - 498

0

0