தண்ணீர் பற்றாக்குறையால் தவிக்கும் மக்கள் ஒருபுறம்…குழாய் உடைந்து சாலையை குளமாக்கிய நீர் மறுபுறம்: அதிகாரிகள் அலட்சியம்?

Author: Rajesh
25 April 2022, 4:30 pm
Quick Share

சென்னை: பூவிருந்தவல்லி அருகே செம்பரம்பாக்கத்தில் இருந்து செல்லும் குடிநீர் குழாய் உடைந்து ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வெளியேறி வீணாகி வருகிறது.

பூவிருந்தவல்லி அருகே உள்ள செம்பரம்பாக்கம் பகுதியில் NH4 சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்காக  பள்ளம் தோண்டியபோது குடிதண்ணீர் குழாய் உடைப்பெடுத்து பெருக்கெடுத்து வீணாகி வருகிறது.

 இன்று இரவு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த வழியாக திருவள்ளூர் அருகே உள்ள உளுந்தை கிராமத்தில் உள்ள பண்ணை வீட்டிற்கு ஓய்வெடுக்க வரும் நிலையில் உடைப்பு எடுத்த குழாயை சரி செய்ய குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

கொளுத்தும் கோடை வெயில் குடிதண்ணீர் கிடைக்காமல் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் அவதியுற்று வரும் சூழலில் அதிகாரிகளின் அலட்சியத்தால் சாலைப் பணிகளை விரிவாக்கம் செய்த போது ராட்சச பைப் லைனில்  உடைத்து  ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வெளியேறி வீணாகி வருகிறது.

உடனடியாக குழாயை சீரமைக்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 477

0

0