கைக்குத்தல் அரிசி : உடல் ஆரோக்கிய சாம்ராஜ்யத்தின் அரசி

14 November 2019, 10:29 am
ARISI-UPDATENEWS360
Quick Share

கைக்குத்தல் அரிசியில் செலினியம் இருக்கின்ற காரணத்தால், பெருங்குடல் புற்றுநோய் தாக்குதலுக்கான சாத்தியக் கூறுகள் முற்றிலும் குறைக்கப்படுகின்றது. கைக்குத்தல் அரிசியில் மிகப்பெருமளவில், நார்ச்சத்து இருக்கின்றது. கைக்குத்தல் அரிசியில் இருக்கின்ற பலவிதமான சத்துக்கள் அனைத்தும், மார்பக புற்றுநோய் மற்றும் இதய நோய்க்கு எதிராக மனிதர்களை தற்காத்துக் கொள்ள உதவுகின்றது.

இரத்தக் குழலில் தடைகளான “பிளாக்குகள்”, உருவாகக்கூடிய அபாயத்தையும் குறைக்கும் ஆற்றல் பெற்றுள்ளது கைக்குத்தல் அரிசி அதன் காரணமாக, இதய நோய் தாக்குதலின் பாதிப்புக்களை முற்றிலுமாக குறைத்திட இயலும் என்று, மறுத்த்துவ ரீதியாக கண்டறியப்பட்டிருக்கின்றது. மேலும், ‘ரைஸ் பிரான் ‘, எனப்படுகின்ற, கைக்குத்தல் அரிசியின் தவிட்டின் மூலமாக கிடைக்கின்ற சமையலுக்கான எண்ணெய், உடலில் இருக்கின்ற தீய கொழுப்பை குறைத்துவிடுகின்றது என்று கண்டறியப்பட்டு இருக்கின்றது. கைக்குத்தல் அரிசியில், எல்டிஎல் -LDL வகையான, கொழுப்பை குறைத்திடுவதற்கு உதவுகின்ற நார்ச்சத்து அதிகமான அளவில் இருக்கின்றது.

கைக்குத்தல் அரிசியில், ஆரோக்கியமான நரம்பு மண்டலத்திற்கு தேவையான மாங்கனீசு அதிகமான அளவில் நிறைந்து காணப்படுகின்றது. இதிலிருக்கும் ஊட்டச்சத்துகள், கொழுப்பு அமிலங்களை உருவாக்கும் பாலியல் ஹார்மோன்களை உற்பத்தி செய்கின்றது.
மேலும், கைக்குத்தல் அரிசியில் ஆரோக்கியமான எலும்புகளை பராமரிப்பதற்கு தேவையான மெக்னீசியம் அதிகமான அளவில் அமையப்பெற்று இருக்கின்றது.