மறைந்து தாக்கும் எதிரி : “டயபடிக் நியூரோபதி” – தீர்வுகள்

8 November 2019, 8:20 am
DIA-UPDATENEWS360
Quick Share

சர்க்கரை நோய் கட்டுக்குள் இல்லாமல் இருந்தால், நரம்புகள் பாதிக்கப்படும். அது போன்ற பாதிப்புகளுக்கு, “டயபடிக் நியூரோபதி” என்ற பெயராகும்.

ரத்தத்தின் சர்க்கரை அளவினை கட்டுப்பாட்டிற்குள் வைக்காதது தான் இதன் மிகவும், முக்கியமான காரணமாகும். ரத்ததில் சர்க்கரையின் அளவானது அதிகருக்கு போது, “சார்பிட்டால்” என்கின்ற வேதிப் பொருளாக உருமாறி மனிதனின் ஒவ்வொரு நரம்புகளிலும் ஒட்டிக்கொள்ளும். அந்த வேதிப்பொருளானது, கொஞ்சம் கொஞ்சமாக நரம்பிழைகளைத் தின்று விடும். அதன் காரணமாக, நரம்புகளின் தகவல் பரிமாற்றமானது தடைப்படும். மேலும், இந்த பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு, நுண்ணிய ரத்தக்குழாய்களும் விரைவாக பாதிக்கப்பட்டுவிடும். நரம்பு முனைகளுக்குப் போதுமான ஊட்டச்சத்தும், ஸ்வாச பிராண வாயுவான, ஆக்ஸிஜனும் கிடைக்கபெறாது. அதன் காரணமாக, அந்த நோயின் பாதிப்புக்களை அதிகப்படுத்திவிடும்.

மேலும், சர்க்கரை நோயின் காரணத்தால், மனிதர்களுக்கு சிறுநீரகமும் பாதிக்கப்பட்டுவிடுவதன் காரணமாக, ரத்தத்தில் நச்சுக்கள் சேர வாய்ப்புருவாகிவிடும். அதன் காரணமாக, நரம்புச் சுவர்களை அந்த நோயானது சிதைத்துவிடும். மேலும், புகைபிடிக்கும் பழக்கமும் சேர்த்துக்கொண்டால், உடலின் நிலைமை மேலும் மோசமாகிவிடும். புகையிலையில் இருக்கும் நச்சுக்கள் ரத்தக்குழாய்களைச் சுருக்கி விடுவதன் காரணமாக, உடல் உறுப்புகளுக்குச் செல்ல வேண்டிய ரத்தம் முற்றிலும் குறைந்து விடுவது முக்கியமான காரணம் ஆகும்.

ரத்தச் சர்க்கரையைக் கட்டுக்குள் வைப்பது மிகவும் முக்கியமான தீர்வாகும். இன்சுலின் சிகிச்சை, ஆரோக்கிய உணவு முறை, உடற்பயிற்சிகளின் மூலமாகவும் இது சாத்தியப்படும். உடல் எடையைச் சரியாகப் பேணுவதற்காக, உடலின் பாதப் பராமரிப்பும், பொருத்தமான காலணிகள் அணிவதும் மிகவும் முக்கியமாகும். ரத்த அழுத்தம், ரத்த கொலஸ்டிரால் போன்றவற்றின் அளவுகளைச் சீராகவும், சம நிலையிலும் வைத்து பராமரித்துக்கொள்ள வேண்டும்.

வருடத்துக்கு ஒருமுறை, “பயோதிசியோமெட்ரி”, என்கின்ற மிக முக்கியமான, பாதப் பரிசோதனையைச் செய்து கொள்ள வேண்டும். இதன் மூலமான வழிமுறைகளில், நரம்புகள் பாதிக்கப்படுவதைத் தடுக்கவும் தள்ளிப் போடவும் இயலும் என்பது உறுதியாகும்..

Leave a Reply