விளிம்பிப்பழம் பற்றி தெரியுமா உங்களுக்கு? இதை சாப்பிடுறதுனால என்னென்னலாம் நல்லது நடக்கும் தெரியுமா?

Author: Hemalatha Ramkumar
17 August 2021, 10:57 am
10 Health Benefits of Eating Star Fruit
Quick Share

விளிம்பிப்பழம் என்று சொன்னதும் அட அது என்னங்க புது பேரா இருக்கே! அப்படினா என்ன என்று நீங்கள் யோசிக்கலாம். நீங்கள் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஆங்கிலத்தில் ஸ்டார் ஃபுரூட் அல்லது கேரம்போலா என்பது தான் தமிழில் விளிம்பிப்பழம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த பழுத்த விளிம்பிப்பழம் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். இந்த விளிம்பிப்பழத்தின் முழு பகுதியையும் சமைக்க வேண்டிய தேவையில்லாமல் பச்சையாக அப்படியே சாப்பிடலாம்.

சீனர்கள் மீன் உடன் இந்த விளிம்பிப்பழத்தையும் சேர்த்து சமைப்பார்கள். ஆஸ்திரேலிய உணவு வகைகளில், இந்த இனிப்பு பழத்திலிருந்து ஜாம் மற்றும் ஊறுகாய் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. புளிப்பு சுவையுடனான இந்த பழம், சில மசாலாப் பொருட்களுடன், நல்ல சுவையை தரக்கூடியது. இது ஜூஸ் தயாரிக்க ஏற்றது. 

விளிம்பிப்பழம் மரங்கள் அலங்கார நோக்கங்களுக்காகவும் வளர்க்கப்படுகின்றன. பச்சை இலைகள் மற்றும் பிரகாசமான மஞ்சள் பழங்கள் பார்ப்பவர்களின் கண்களைக் கவரும்.

விளிம்பிப்பழத்தின் 10 ஆரோக்கிய நன்மைகள்

செரிமானத்தை மேம்படுத்தும்

விளிம்பிப்பழத்தில் குறிப்பிடத்தக்க அளவு நார்ச்சத்து உள்ளது. இது உங்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து வயறு வீக்கம் மற்றும் வயிற்றுப் பிடிப்பைத் தடுக்கிறது. இது குடல் இயக்கத்தை சீராக்க உதவுகிறது. பழத்தில் உள்ள B வைட்டமின்கள் சீரான என்சைம் அளவை பராமரிப்பதை உறுதி செய்கின்றன.

தோல் மற்றும் முடியின் தரத்தை மேம்படுத்தும்

இதில் உள்ள வைட்டமின் C சத்து ஆரோக்கியமான சருமம் மற்றும் கூந்தலுக்கு மிகவும் முக்கியமானது. வைட்டமின் C கொலாஜனின் உற்பத்திக்கு உதவுகிறது, உடலுக்கு ஆரோக்கியமான பொலிவை வழங்க ஏற்றது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

வைட்டமின் C இன் மற்றொரு முக்கியமான நன்மை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் ஆகும். இதன் காரணமாக விளிம்பிப்பழம் காய்ச்சல் காலங்களில் பயன்படுத்த ஏற்றதாக ஆக்குகிறது. வலுவான நோயெதிர்ப்பு அமைப்பு உடலில் தொற்றுநோயை எதிர்த்துப் போராட உதவும்.

எடை இழப்புக்கு உதவும்

நார்ச்சத்து நிறைந்த இந்த பழம் நிறைவான உணர்வை வழங்கும். மேலும், கலோரி குறைவாக இருப்பதாலும் மற்றும் கொழுப்பு உள்ளடக்கம் குறைவாக இருப்பதாலும் எடை இழக்க முயற்சி செய்பவர்களுக்கு இது ஏற்ற ஒன்றாக இருக்கும்.

இரும்புச்சத்து குறைபாட்டைப் போக்கும்

வைட்டமின் C உடலில் இரும்பு உறிஞ்சுதலை மேம்படுத்துகிறது. விளிம்பிப்பழத்தில் இரும்பு சத்து குறைவாக இருந்தாலும், இரும்பு உறிஞ்சுதலை மேம்படுத்தவும், இரத்த சோகைக்கு உதவவும் இது ஏற்றதாக இருக்கும்.

அழற்சியைப் குறைக்கும்

ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்த தாவர கலவைகள் அழற்சியைப் போக்க உதவும். மேலும் தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களுடன் போராட சிறந்ததாக இருக்கும். வைட்டமின் C அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டது.

இதய ஆரோக்கியத்திற்கு நல்லது

பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்ற தாதுக்கள் இரத்த நாளங்கள் ஓய்வெடுக்க உதவும் விளைவைக் கொண்டுள்ளன. இந்தப் பழத்தில் காணப்படும் பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. பழத்தில் உள்ள கால்சியம் உள்ளடக்கம் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.

நீரேற்றத்தை அதிகரிக்கும்

விளிம்பிப்பழத்தில் 90% க்கும் அதிகமான தண்ணீர் உள்ளடக்கம் உள்ளதன் காரணமாக கோடைகாலத்திற்கு உகந்த பழங்களில் இது ஒன்று ஆகும். உடலை ஹைட்ரேட் செய்து குளிர்விக்க ஜூஸாக குடிக்கவும்.

தூங்க உதவுகிறது

விளிம்பிப்பழத்தில் உள்ள மெக்னீசியம் தூக்கத்தை ஊக்குவிக்கும் பண்பைக் கொண்டது. இந்த பழத்தை சாப்பிடுவதால் நன்றாக தூங்கலாம்.

இன்சுலின் அளவை ஒழுங்குபடுத்தும்

விளிம்பிப்பழங்களில் 4% க்கும் குறைவான சர்க்கரை மற்றும் அதிக நார்ச்சத்து உள்ளது. நார்ச்சத்து உடலில் சர்க்கரை அளவை சீராக வைத்துக்கொள்ள உதவும். அதன் குறைந்த சர்க்கரை உள்ளடக்கத்தின் காரணமாக நீரிழிவு நோயாளிகளுக்கும் இது ஏற்ற ஒன்றாகும்.

Views: - 998

0

0