குடல் புழுக்களை அகற்ற உதவும் அருமையான 10 பாட்டி வைத்திய முறைகள் உங்களுக்காக இங்கே

Author: Dhivagar
6 August 2021, 5:11 pm
10 Home Remedies To Get Rid Of Intestinal Worms
Quick Share

உங்களுக்கு குடல் புழுக்கள் பிரச்சினை இருந்தால், படாதபாடு பட வேண்டியிருக்கும். குடல் ஒட்டுண்ணிகளைக் கொல்ல பல ரசாயன மருந்துகள் உள்ளன, ஆனால் பக்க விளைவுகள் இல்லாமல் குடல் புழுக்களை குணப்படுத்த இயற்கை வைத்தியத்தினால் தான் முடியும். 

வயிற்றுப் புழுக்களை இயற்கையான பாட்டி வைத்தியங்கள் உள்ளன. வயிற்றில் உள்ள புழுக்கள் பெரும்பாலும் இரைப்பைக் குழாயில், குடல் சுவரில் தான் இருக்கும். அவை குடலில் உருவாவதால் நிறைய அசௌகரியங்கள் ஏற்படக்கூடும். இறைச்சியை சாப்பிடுவது, பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி, அசுத்தமான தண்ணீர் குடிப்பது மற்றும் போதிய சுகாதாரமின்மை போன்ற காரணங்களால் இந்த குடற்புழு பிரச்சினை ஏற்படக்கூடும். குடல் புழுக்களின் மிகவும் பொதுவான வகைகள் வட்டப்புழு, ஊசிப்புழு, சாட்டைப் புழு, தட்டைப்புழு மற்றும் நாடாப்புழு ஆகியவை ஆகும். 

குடற்புழு பிரச்சினையால் ஏற்படும் அறிகுறிகள் இங்கே:

– பசியிழப்பு

– வயிற்று வலி

– வயிற்றுப்போக்கு, குமட்டல் அல்லது வாந்தி

– வாய்வு/வீக்கம்

– வயிற்று வலி

– தொடர் இருமல்

– பலவீனம்

– சோர்வு

– எடை இழப்பு

குடல் ஒட்டுண்ணியை விரைவாக அழிக்கும் வீட்டு வைத்தியங்களின் பட்டியலை இந்த பதிவில் பார்க்கலாம்:

பழுக்காத பப்பாளி: ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான பாலில், ஒரு டீஸ்பூன் பழுக்காத பப்பாளி மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து கலக்கவும். தினமும் ஒரு வாரத்திற்கு வெறும் வயிற்றில் இதை குடித்து வந்தால் வித்தியாசத்தை நீங்களே உணருவீர்கள்.

மஞ்சள்: இது ஆண்டிசெப்டிக் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டது மற்றும் அனைத்து வகையான குடல் புழுக்களையும் அகற்ற உதவியாக இருக்கும். ஒரு கிளாஸ் மோர் எடுத்து அதில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்க்கவும். இதை தினமும் குடித்து வந்தால் உடலில் உள்ள ஒட்டுண்ணிகள் வெளியேறும்.

பூசணி விதைகள்: ஒட்டுண்ணிகளை செயலிழக்கச் செய்யும் ஒட்டுண்ணி எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட குக்குர்பிடாசின் என்ற கலவை பூசணி விதைகளில் உள்ளது, இதனால் உடலில் இருந்து அனைத்து ஒட்டுண்ணிகளும் வெளியேறும். ஒரு டீஸ்பூன் வறுத்த பூசணி விதைகளை அரை கப் தண்ணீர் மற்றும் தேங்காய் பால் சேர்த்து கலக்கவும். இந்த கலவையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு வாரம் குடித்து வர நல்ல பலன் கிடைக்கும்.

வேப்பிலை: கொஞ்சம் வேப்ப இலைகளை அரைத்து நன்றாக பேஸ்ட் போல செய்து கொள்ளுங்கள். காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் இந்த பேஸ்டை அரை ஸ்பூன் கலந்து குடிக்கவும். இந்த பரிகாரத்தை சில நாட்கள் பின்பற்ற, உடலில் இருந்து ஒட்டுண்ணிகள் வெளியேறும்.

பூண்டு: வயிற்றில் உள்ள புழுக்களை அகற்ற உதவும் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை பூண்டு கொண்டுள்ளதால். ஒரு வாரத்திற்கு வெறும் வயிற்றில் தினமும் பச்சைப் பூண்டை  மென்று அல்லது பூண்டுடன் தேநீர் போட்டுக் குடிக்கலாம்.

தேங்காய்: தேங்காய் குடல் புழுக்களை நீக்க உதவும் மிகவும் பயனுள்ள வீட்டு வைத்தியம் ஆகும். உங்கள் காலை உணவில் ஒரு தேக்கரண்டி துருவிய தேங்காயையும் சேர்த்துச் சாப்பிடுங்கள். 3 மணி நேரம் கழித்து, ஒரு டீஸ்பூன் ஆமணக்கு எண்ணெயுடன் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான பாலை குடிக்கவும். அனைத்து வகையான குடல் புழுக்களையும் போக்க இதை ஒரு வாரம் செய்து வந்தாலே போதும். சமையலுக்கென விற்கப்படும் ஆமணக்கு எண்ணெயை மட்டுமே எப்போதும் வாங்க வேண்டும்.

கிராம்பு: கிராம்புகளில் ஆண்டிசெப்டிக் மற்றும் ஒட்டுண்ணி எதிர்ப்பு பண்புகள் உள்ளன, அவை குடல் புழுக்கள் மற்றும் அவற்றின் முட்டைகளை அழிக்கின்றன. ஒரு பாத்திரத்தில் இரண்டு அல்லது மூன்று கிராம்புகளை போட்டு ஒரு கப் தண்ணீரில் கொதிக்க வைக்கவும். 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து வடிகட்டவும். இந்த கரைசலை ஒரு வாரத்திற்கு தினமும் 3 முதல் 4 முறை குடிக்கவும்.

கேரட்: கேரட் பீட்டா கரோட்டினின் ஒரு சிறந்த ஆதாரமாக விளங்குகிறது, இது குடல் புழுக்களின் முட்டைகளை அழிக்கும். கேரட்டை வெறும் வயிற்றில் ஒரு வாரம் சாப்பிட்டால் குடல் புழுக்கள் நீங்கும்.

ஓம விதைகள்: ஓம விதைகள்  குடல் ஒட்டுண்ணிகளுக்கு சிகிச்சையளிக்கும் ஒரு நல்ல இயற்கை பொருள் ஆகும். காலையில் வெறும் வயிற்றில் ஒரு டீஸ்பூன் வெல்லத்தை உட்கொள்ளவும். 15-20 நிமிடங்களுக்குப் பிறகு, ½ தேக்கரண்டி ஓம விதைகளை ஒரு கிளாஸ் தண்ணீருடன் உட்கொள்ளவும். இரண்டு வாரங்களுக்கு தினமும் ஒரு முறை இதைச் செய்யுங்கள் நல்ல பலன் கிடைக்கும்.

Views: - 1664

1

0