அச்சச்சோ.. காலையில் சீக்கிரமா எழுந்தா இப்படியெல்லாம் நடக்குமா? இவ்வளவு நாள் தெரியாம போயிடுச்சே!
26 September 2020, 1:55 pm“அதிகாலை நேரம் தங்கம் மாதிரி” என்று பெரியோர்களும் அதன் நன்மைகளை அறிந்த பலரும்கூறியுள்ளனர். ஆனால், நாமோ நாளை காலை 6 மணிக்கு எழுந்திருக்க வேண்டும் என்று அலாரத்தை வைத்தால் ஸ்னூஸ் செய்து செய்து நாம் எழுதிருப்பதற்குள் எப்படியும் மணி 9 ஆகிவிடும். ஆனால், அப்படி காலையில் நேரமா எழுதிருப்பதால் என்னதான் நடக்கும். வாங்க சிம்பிளா பார்க்கலாம்.
உற்பத்தித்திறன் அதிகமாகும்
சீக்கிரம் எழுந்துவிட்டால் அந்நாளே மிகவும் சுறுசுறுப்பானதாக மாறும். உங்கள் வேலைகளுக்கு அதிக நேரம் கிடைப்பதோடு, இது உங்கள் வேகத்தையும் அதிகரிக்கும். ஒரு நபர் சீக்கிரம் எழுந்துவிட்டால், அவர் அதிக ஆற்றல் மிக்கவர் என்றும், ஒரு பணியைச் செய்ய குறைந்த நேரமே எடுப்பார் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சிறந்த முடிவுகளை எடுப்பதிலும், திட்டமிடல் மற்றும் இலக்குகளை அடைவதிலும் அவர் மிகவும் திறமையானவராக இருப்பார்.
மன ஆரோக்கியம்
சீக்கிரம் எழுந்திருப்பதன் மிக முக்கியமான நன்மை என்றால், இது மன அழுத்த அளவைக் குறைக்கும். நீங்கள் அதிகாலையில் சீக்கிரம் எழுந்தவிட்டால், காலையில் எங்காவது செல்ல வேண்டுமென்றால் அவசர அவசரமாக செல்ல வேண்டிய அவசியமில்லை. நீங்கள் ஒரு நம்பிக்கையோடு அந்நாளை துவங்கலாம். பரபரப்பு இல்லை என்றால் உங்களுக்கு மன அழுத்தமும் பெரிதாக இருக்காது.
தரமான தூக்க நேரம்
பெரும்பாலும் சீக்கிரமாக எழுந்திருப்பவர்கள் சீக்கிரமே படுக்கைக்குச் செல்வார்கள். காலப்போக்கில், சீக்கிரம் எழுந்திருப்பது அவ்வளவு கஷ்டமானதாகவும் இருக்காது. ஆனால் உங்கள் வாழ்க்கையில் அது ஒரு வழக்கமாக பின்பற்றப்பட வேண்டும். அப்போதுதான் உங்கள் உடலின் கடிகாரம் உங்கள் புதிய தூக்க வழக்கத்திற்கு ஏற்றவாறு சிறந்த தூக்க தரத்தை வழங்கும்..
அதிக மதிப்பெண்கள்
டெக்சாஸ் பல்கலைக்கழகம் நடத்திய ஒரு ஆய்வில், காலையில் நேரமாக எழுந்து படித்த மாணவர்கள் அதிக மதிப்பெண்களைப் பெற்றனர். தாமதமாக எழுந்த மாணவர்களின் GPA க்களை விட இவர்களின் GPA அதிகமாக இருந்தன. எனவே காலையில் எழுந்து படிக்கும் மாணவர்கள் அதிக மதிப்பெண்களை எடுக்க முடியும்.
பாசிட்டிவிட்டி
முன்கூட்டியே எழுந்திருப்பவர்கள் அதிக நேர்மறைத் எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். காலையில் நேரமாக எழுந்திருப்பவர்கள் ஒரு குறுகிய காலத்திற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த வாழ்க்கையிலும் மகிழ்ச்சியாக இருந்ததாக ஒரு ஆராய்ச்சியின் தகவல் தெரிவிக்கிறது.