எப்பேர்ப்பட்ட வியர்வை நாற்றத்தையும் நிரந்தரமாக போக்கும் ஒரு அதிசய மூலிகை!!!

26 January 2021, 9:01 pm
Quick Share

பொதுவாக மனித உடலில் அந்தரங்க பகுதி மற்றும் அக்குளில் வியர்வை அதிகமாக இருக்கும். நமது உடலில் இரண்டு வகையான வியர்வை சுரப்பிகள் உள்ளன. இந்த வியர்வையானது எந்தவித துர்நாற்றத்தையும் ஏற்படுத்தாது. இது நம் சருமத்திற்கு பல நன்மைகளை தரக்கூடியது. ஆனால் இதில் குடியேறும் பாக்டீரியாககள் துர்நாற்றத்தை உருவாக்கி விடுகின்றன. 

டைட்டான ஆடை போடுபவர்களுக்கு இது பெரும் பிரச்சினை ஆகி விடுகிறது. காற்று உள்ளே செல்ல முடியாத காரணத்தால் துர்நாற்றம் அதிகமாக வீசும். வயது வந்த பிறகு உடலில் இருந்து துர்நாற்றம் வீச இதுவே காரணம். அதுவே குழந்தைகள் மீது நாற்றம் அடிக்காததற்கு காரணம். பழங்காலத்தில் துர்நாற்றத்தை போக்க மஞ்சள் தூள், பன்னீர், குளியல் பொடி போன்றவற்றை பயன்படுத்தி வந்தனர். இப்போது வாசனை மிக்க குளியல் சோப்புகள், பெர்ஃபியூம் போன்றவை பயன்பாட்டில் உள்ளன. 

ஆனால் பெர்ஃபியூம்களை பொறுத்தவரை அதன் வாசனை நாள் முழுவதும் நீடிக்காது. அடுத்தவர்களின் அருகில் செல்லவே முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசும். அதிகப்படியான வியர்வை நாற்றம் கற்றாழை நாற்றம் என்று சொல்லப்படுகிறது. இதனை போக்க சித்த மருத்துவம் சொல்லும் வழிமுறையை பற்றி பார்க்கலாம். 

நமக்கு தேவையான பொருட்கள்: 

கோரைக்கிழங்கு- 100 கிராம்

கிச்சிலிக்கிழங்கு- 100 கிராம்

ஆவாரம் செடி வேர்- 300 கிராம்

பன்னீர் ரோஜா இதழ்- 100 கிராம்

மேலே கூறப்பட்டுள்ள நான்கு பொருட்களையும் நிழலில் காய வைக்கவும். பிறகு பொருட்கள் அத்தனையையும் தனித்தனியாக அரைத்து கொள்ளவும். ஒன்றாக அரைத்தால் சரியாக அரைப்படாது. அவ்வளவு தான்… நமது மூலிகை பொடி தயாராகி விட்டது. பெண்கள் இதனை பயன்படுத்தும் போது இதனோடு 5 தேக்கரண்டி மஞ்சள் தூள் கலந்து பயன்படுத்தவும். ஆண்கள் அப்படியே பயன்படுத்தலாம்.  

பயன்பாட்டு முறை:

நாம் தயாரித்த பொடியை குளிக்கும் முன்பு பன்னீர் அல்லது நீரில் கலந்து உடல் முழுவதிலும் பூசிக் கொள்ள வேண்டும். பத்து நிமிடங்கள் விட்டு விட்டு பிறகு தேய்த்து குளிக்கவும். சோப்பு பயன்படுத்தாமல் இந்த மாவோடு பாசிப்பருப்பு மாவு மட்டும் பயன்படுத்தி வந்தாலே நல்ல பலன் கிடைக்கும். 

ஏனெனில் இந்த பொடியை பயன்படுத்தும் போது சோப்பு பயன்படுத்தக் கூடாது. இதனை தொடர்ந்து ஒரு மண்டலம் செய்து வந்தாலே எப்பேர்ப்பட்ட துர்நாற்றமும் ஓடிவிடும். அது மட்டும் இல்லாமல் எந்த வித தோல் வியாதிகளும் உங்களை நெருங்காது. மேலும் இதற்கு பெரிதாக செலவு எதுவும் ஆகாது. இது முற்றிலும் இயற்கையானது என்பதால் இதனை பயமே இல்லாமல் தாராளமாக பயன்படுத்தலாம். நிச்சயமா நீங்களும் டிரை பண்ணி பாருங்க…

Views: - 0

0

0