உங்க வீட்டுல கற்றாழை இருக்கா? அதை எதுக்கெல்லாம் பயன்படுத்தனும் தெரியுமா? கட்டாயம் தெரிஞ்சுக்க வேண்டிய தகவல்
Author: Hemalatha Ramkumar16 August 2021, 3:50 pm
கற்றாழை இப்போதெல்லாம், மாடித்தோட்டத்தில் அல்லது அதன் மருத்துவ குணம் அறிந்து வீடுகளிலும் வளர்க்கப்பட்டு வருகிறது. குறைவான நீரையே எடுத்துக்கொண்டு வெப்பத்தைத் தாங்கி வளரும் இந்த கற்றாழை நாம் நினைத்தும்கூட பார்த்திராத பல எண்ணற்ற நன்மைகளைக் கொண்டுள்ளது. அவை என்னென்ன என்பதை இந்த பதிவில்
கற்றாழை சாற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
கற்றாழை சாற்றில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் நம் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிரம்பியுள்ளன.
- வைட்டமின் C, A மற்றும் E
- பீட்டா கரோட்டின்
- ஃபோலிக் அமிலம்
- கால்சியம்
- மெக்னீசியம்
கற்றாழை சாற்றின் 9 ஆரோக்கிய நன்மைகள்
மலச்சிக்கலைக் குணப்படுத்தும்
மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் கற்றாழை சாற்றை அருந்தலாம். இது இயற்கையான மலமிளக்கி என்பதால் இதை அருந்தினால் மலச்சிக்கல் குணமாகும். கற்றாழை சாறு உடலில் உள்ள நீரின் அளவை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது. உடல் நீரேற்றத்துடன் இருந்தால் மலச்சிக்கல் பிரச்சினை இல்லாமல், மலம் எளிதாக வெளியேறும்.
நெஞ்செரிச்சல் குணமாகும்
நெஞ்செரிச்சல் என்பது செரிமான அமிலம் வயிற்றை விட்டு வெளியேறி உணவுக்குழாய் வழியே வரும் நிலை ஆகும். ஆனால், கற்றாழை சாறு அருந்துவது நெஞ்செரிச்சலைக் குறைத்து வயிற்றுக்கு நிவாரணம் அளிக்கும். இரைப்பைப் புண்களுக்கு சிகிச்சையளிக்கவும் பயனுள்ளதாக இருக்கும்.
நீரேற்றத்தை வழங்கும்
தீங்கு விளைவிக்கும் நச்சுகளை வெளியேற்ற நம் உடல் நீரேற்றத்துடன் இருப்பது அவசியம். கற்றாழை சாறு நம் உடலுக்கு உடனடி நீரேற்றத்தை அளிக்கிறது மற்றும் நீரிழப்புக்கு சிகிச்சையளிக்கவும் உதவுகிறது. கற்றாழை சாறு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களுடன் நீரேற்றத்தை வழங்குவதால், இதை நம் உணவு வழக்கத்தில் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது.
கல்லீரல் ஆரோக்கியம் மேம்படும்
கற்றாழை சாறு உடலை நீரேற்றத்துடன் வைத்திருப்பதோடு பைட்டோநியூட்ரியன்ட்களால் நிறைந்துள்ளது. உடலில் நீர்ச்சத்து இருந்தால் மட்டுமே நமது கல்லீரல் சரியாக செயல்பட முடியும். கற்றாழை சாறு உடலில் உள்ள நீரின் அளவை பராமரிக்கிறது மற்றும் கல்லீரல் உடலை நச்சுத்தன்மை அற்றதாக மாற்ற உதவுகிறது.
சரும பொலிவு
கற்றாழை சாற்றில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன மற்றும் சருமத்திற்கு சிறந்தது. கற்றாழை மெல்லிய கோடுகளைத் தடுத்து, வடுக்களை மறைத்து, சருமத்தை அழகாக பொலிவுடன் வைத்துக்கொள்ளும். இது சூரியனில் இருந்து தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது. கற்றாழை சாறு குடிப்பது உங்கள் உடலில் உள்ள அனைத்து நச்சுகளையும் வெளியேற்றி, தெளிவான மற்றும் பளபளப்பான சருமத்தை கொடுக்க உதவியாக இருக்கும்.
செரிமானத்திற்கு உதவும்
கற்றாழை நம் உடலில் உள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பை உடைக்க உதவுகிறது. இது வயிற்றில் அமில உற்பத்தியைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் நமது குடல்களை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. இது நமது குடலில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. உங்களுக்கு ஏதேனும் செரிமான பிரச்சனைகள் இருந்தால், கற்றாழை சாற்றை உங்கள் உணவு வழக்கத்தில் தவறாமல் சேர்த்துக் கொள்ளுங்கள்.
வைட்டமின் C நிறைந்தது
கற்றாழையில் வைட்டமின் C நிறைந்துள்ளது. நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் C மிகவும் அவசியம். உடலில் இரும்புச் சத்தை உறிஞ்சுவதற்கு வைட்டமின் C மிகவும் உதவியாக இருக்கிறது.
ஈறுகளில் வீக்கத்தைக் குறைக்கவும்
கற்றாழை சாற்றுடன் வாய் கொப்பளித்தால் ஈறுகளில் வீக்கத்தை குறைக்க உதவும். கற்றாழை ஆன்டிபாக்டீரியல் மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகளைக் கொண்டுள்ளது, இது ஈறுகளில் தொற்று இல்லாமல் இருக்க உதவுகிறது.
0
0