கறிக்குழம்புக்கு மசாலா அரைக்கும்போது கச கசா ஏன் சேர்க்குறாங்க தெரியுமா? | Poppy Seeds | Khus khus

22 July 2021, 10:58 am
Amazing Benefits of Poppy Seeds
Quick Share

நம்ம வீட்டில் அம்மாக்கள் குழப்புகளுக்கு மசாலா அரைக்கும்போது  கச கசா என்ற ஒன்றை சேர்ப்பார்கள். அது எதுக்கு என்று கூட நாம் யோசித்திருக்க மாட்டோகம். ஆனால், இந்த கச கசாவில் அவ்வளவு நம்மையெல்லாம் இருக்கும். இது ஏதோ புதிதாக சேர்க்கப்படும் பொருள் எல்லாம் ஒன்றும் இல்லை. பாரம்பரியமாக காலம் காலமாக நம் கொள்ளுப்பாட்டி எள்ளுப்பாட்டி எல்லாம் சமைக்கும் காலத்திலிருந்தே நம் கலாச்சாரத்தில் நம் ஆரோக்கியத்திற்காக சேர்க்கப்பட்டு வரும் ஒரு பொருள் தான்.  இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு பெயர்களால் கச கசா  விதைகள் பயன்படுத்தப்பட்டு தான் வருகிறது. ஏராளமான சைவ மற்றும் அசைவ உணவு வகைகளில் இது முக்கியமாக சேர்க்கபடும். அதற்கான காரணங்களை தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

கருவுறுதல் மேம்பாடு

பெண்களின் கருவுறுதல் திறனை அதிகரிப்பதில் கச கசா  விதைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஃபலோபியன் குழாய்களிலிருந்து சளியை அகற்றி கர்ப்பம் தரிக்கும் திறனை மேம்படுத்த உதவுகிறது. இது பாலியல் ஆசையை மேம்படுத்தும் மற்றும் ஆண்மை ஆற்றலை அதிகரிப்பதன் மூலம் பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் திறன் கொண்டது.

தூக்கமின்மையை போக்கும்

கச கசா  தூக்கத்தைத் தூண்டும் திறன் கொண்டது. மனதை அமைதிப்படுத்தும் விளைவை உருவாக்கவும் மன அழுத்தத்தை குறைக்கவும் இந்த விதைகள் மிகவும் உதவியாக இருக்கின்றன. உணவுகளில் இதை சேர்த்துக் கொண்டால் நல்ல தூக்கம் கிடைக்கும். 

எலும்பு வலிமை

இந்த கச கசாவில் தாமிரம் மற்றும் கால்சியம் நிறைந்திருப்பதால், எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த இந்த  விதைகள் உதவுகின்றன. விதைகளில் உள்ள மாங்கனீசு எலும்புகளை கடுமையான சேதத்திலிருந்து பாதுகாத்து புரோட்டீன் கொலாஜன் உற்பத்திக்கு உதவுகிறது. 

செரிமானத்தை மேம்படுத்தும்

கச கசா  விதைகள் கரையாத நார்ச்சத்துக்கள் நிறைந்த மூலமாகும், மேலும் செரிமான அமைப்பை வலுப்படுத்தவும் மலச்சிக்கலை திறம்பட குணப்படுத்தவும் உதவுகிறது.

வாய் புண்களை குணப்படுத்தும் 

கச கசா  விதைகள் உடலுக்கு குளிர்ச்சியூட்டும் பண்புகளைக் கொண்டிருப்பதால், வாய் புண்களுக்கு சிகிச்சையளிக்க உதவும். 

இரத்த அழுத்த கட்டுப்படுத்தல்

கச கசா  விதைகளில் அத்தியாவசியமான ஒலியிக் அமிலம் இருப்பதால் இரத்த அழுத்த அளவைக் குறைக்கும் என்று அறியப்படுகிறது.

கண்களுக்கு சிறந்தது

கச கசா  விதைகளில் உள்ள துத்தநாகம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற உள்ளடக்கம் பார்வையை மேம்படுத்த உதவுகிறது மற்றும் மாகுலர் சிதைவு போன்ற கண் நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. மேலும், ஆரோக்கியமான பார்வைக்கும் கண் பராமரிப்புக்கும் உதவுகிறது.

சிறுநீரக கற்களுக்கு சிகிச்சை

கச கசா  விதைகளில் உள்ள பொட்டாசியம் உள்ளடக்கம் சிறுநீரக கற்களுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது, மேலும் அவை மீண்டும் ஏற்படுவதைத் தடுக்கிறது. 

தைராய்டுக்கு நல்லது

துத்தநாகம் தைராய்டு சுரப்பிகளுக்கு ஒரு முக்கிய ஊட்டச்சத்து  ஆகும், துத்தநாக உள்ளடக்கம் கச கசா  விதைகளில் நிறைந்து காணப்படுவது சரியான தைராய்டு செயல்பாட்டிற்கு உதவியாக இருக்கும் 

நீரிழிவு சிகிச்சை

நீரிழிவு நோயாளிகள் உணவில் கச கசா  விதைகள் சேர்த்துக்கொள்ள வேண்டும். கச கசா  விதைகளில் உள்ள மாங்கனீசு நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.

இயற்கை வலி நிவாரணி

பல தலைமுறைகளாக, கச கசா  விதைகள் வலியைக் குறைக்கும் ஒரு இயற்கை நிவாரணியாக அறியப்படுகிறது. உடல் வலியைக் குறைக்க கச கசா  விதைகளைச் சூடான நீரில் கலந்து கச கசா  தேநீராக உட்கொள்ளலாம். 

பொடுகு சிகிச்சைக்கு உதவும்

ஊறவைத்த கச கசா  விதைகள், வெள்ளை மிளகு, தயிர் ஆகியவற்றை ஒரு பேஸ்ட் போல தயார் செய்து உங்கள் தலைமுடிக்கு தடவவும். அரை மணி நேரம் விட்டுவிட்டு முடியைக் கழுவவும். பொடுகு ஏற்படுவதைத் தடுக்க தவறாமல் இதை தொடர்ந்து செய்யவும். இது பொடுகு பிரச்சினையைப் போக்குவதற்கான சிறந்த வீட்டு வைத்தியம் ஆகும்.

Views: - 218

0

0

Leave a Reply