நெல்லிக்காய் இருக்கும்போது நீங்க ஏன் பார்லருக்கு போறீங்க?

19 July 2021, 6:07 pm
amla beauty benefits in tamil
Quick Share

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் சருமத்தை அழகாக பராமரிக்கவும் நெல்லிக்காய் உதவியாக இருக்கும். நெல்லிக்காயானது ஆயுர்வேதத்தில் அழகு சாதன பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பல வகையான சரும நோய்களை சரி செய்யும் தன்மை நெல்லிக்காய்க்கு உண்டு. ஆன்டி ஏஜிங், ஆன்டி அக்னி கிரீம்கள் செய்யவதில் நெல்லிக்காய்க்கு முக்கிய பங்கு உண்டு. 

நெல்லிக்காயில் ஆன்டி ஆக்ஸிடன்டுகள் நிறைந்து காணப்படுகிறது. மேலும் வைட்டமின் C அதிகமாக உள்ளது. இதன் காரணமாக நெல்லிக்காய் சரும பராமரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. சரும பராமரிப்பிற்கு நெல்லிக்காய் பயன்படுத்துவது பாரம்பரிய முறையாகும். நெல்லிக்காயை பேஸ் பேக்காக போட்டு வரும் போது நல்ல ஆரோக்கியமான சருமம் பெறலாம்.

நெல்லிக்காய் பயன்கள்:

◆பருக்களில் இருந்து விடுபட நெல்லிக்காய் பயன்படுத்தலாம். வைட்டமின் C அதிகம் உள்ள நெல்லிக்காய் தெரப்யூட்டிக் தன்மை கொண்டதாக அமைகிறது. இதனால் பருக்களை கொட்ட செய்து முகத்தை அழகாக்குகிறது.

◆நீண்ட காலம் சூரியனில் இருந்து வெளிபடும் UV கதிர்களால் ஏற்பட்ட பாதிப்பை தடுக்கும் தன்மை நெல்லிக்காய்க்கு உள்ளது.

◆வயதான தோற்றத்தை குறைக்க கூடிய ப்ரோகொலாஜன் என்ற பொருளின் உற்பத்தியை தூண்டுகிறது.

◆பருக்களினால் ஏற்பட்ட தழும்புகளை குறைக்க நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் C உதவும்.

◆சோர்வாக தெரியும் சருமத்தை புத்துணர்ச்சியோடு இருக்க செய்ய உதவும் வைட்டமின் C மற்றும் வைட்டமின் E நெல்லிக்காயில் உள்ளது.

◆முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பிசுக்கை எடுக்கிறது.

◆ஆன்டி ஆக்ஸிடன்டுகள் அதிகம் உள்ள நெல்லிக்காய் ஆன்டி ஏஜிங் பொருளாக அமைகிறது. 

நெல்லிக்காய் பயன்படுத்தும் முறை:

1.பருக்களுக்கு:

ஒரு பவுலில் 1/2 தேக்கரண்டி சின்ன வெங்காயம் சாற்றை எடுத்து கொள்ளுங்கள். அதோடு ஒரு தேக்கரண்டி நெல்லிக்காய் பொடி மற்றும் ஃபிரஷ் கற்றாழை சேர்த்து கலந்து விடவும். பருக்கள் இருக்கும் இடங்களில் இதனை தடவி 15 நிமிடங்களுக்கு பிறகு வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவவும். இதனை வாரத்தில் இரண்டு முறை செய்யுங்கள்.

2. பொலிவூட்டும் சருமத்திற்கு:

இரண்டு தேக்கரண்டி நெல்லிக்காய் பொடி மற்றும் 1/2 தேக்கரண்டி தயிர் எடுத்து கலந்து கொள்ளவும். இதோடு ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கொள்ளலாம். இந்த கலவையை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி 15-20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவி கொள்ளுங்கள். இதனை வாரத்திற்கு ஒரு முறை செய்தாலே பளபளப்பான சருமத்தை பெறலாம்.

3. வயதான தோற்றத்தை தடுக்க:

ஒரு தேக்கரண்டி நெல்லிக்காய் பொடியோடு இரண்டு தேக்கரண்டி வெந்நீர் கலந்து கலந்து கொள்ளவும். ஒரு அவகேடோ பழத்தை குடைந்து அதனையும் நெல்லிக்காய் பொடியோடு சேர்த்து அதனை முகத்தில் பேஸ் பேக்காக போடவும். இது காய 20 – 25 நிமிடங்கள் ஆகும். பிறகு முகத்தை வெதுவெதுப்பான நீரால் துடைத்து எடுங்கள். 

4. எண்ணெய் பிசுக்கு கொண்ட சருமத்திற்கு:

இரண்டு தேக்கரண்டி நெல்லிக்காய் பொடியில் ஒரு தேக்கரண்டி ரோஸ் வாட்டர் கலந்து கொள்ளவும். இந்த மாஸ்கை சுத்தமான முகத்தில் தடவி கொள்ளுங்கள். 15 – 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி கொள்ளலாம். முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பிசுக்கில் இருந்து விடுபட இதனை வாரத்தில் 2 – 3 முறை செய்யவும்.

5. சூரிய கதிர்களால் ஏற்பட்ட பாதிப்பிற்கு:

ஒரு தக்காளியை எடுத்து நன்றாக பிசைந்து கொள்ளவும். இதனோடு ஒரு தேக்கரண்டி நெல்லிக்காய் பொடி சேர்த்து கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவவும். இதனை 15 – 20 நிமிடங்களுக்கு பிறகு கழுவி கொள்ளலாம். இவ்வாறு வாரத்தில் 3 – 4 முறை செய்தால் விரைவில் பயன் பெறலாம்.

Views: - 189

0

0

Leave a Reply