முதல் முறையாக யோகா செய்ய போறீங்களா… உங்களுக்கான டிப்ஸ் இது!!!

14 April 2021, 6:41 pm
Quick Share

யோகாவை முதல் நாளிலேயே கற்றுக்கொள்ள முடியாது.  ஏனெனில் தியானம் செய்வது எப்படி என புரிந்துகொள்வது கொஞ்சம் கடினமான காரியமாகும். முதல் முறையாக யோகா பயிற்சி  செய்யப் போகிறீர்கள் என்றால் நீங்கள் பின்பற்றக்கூடிய வெவ்வேறு குறிப்புகள் மற்றும் வெவ்வேறு நுட்பங்களை உள்ளன‌. அது என்ன என்பதை இப்போது பார்ப்போம். 

1. உங்கள் சுவாசத்தை எண்ணுங்கள்: 

தியானம் செய்ய எளிதான வழி, உட்கார்ந்து, கண்களை மூடி, உங்கள் உள்ளிழுக்கும் மற்றும் வெளியே விடும்  சுவாசத்தை எண்ணுவதாகும். அவற்றை எண்ணும்போது 15-20 உங்கள் கவனம் முழுவதும் உங்கள் சுவாசத்திலே இருக்கும். 

2. காட்சிப்படுத்துதல்: 

தியானம் செய்யும் போது உங்களுக்கு பிடித்தமான ஏதாவது ஒரு தருணத்தை காட்சிப்படுத்தி பாருங்கள்.  இனிமையான இயற்கை சூழலை கூட நீங்கள்  கற்பனை செய்து பார்க்கலாம். உங்கள் மனதிலும் உடலிலும் நேர்மறை ஆற்றலைக் கொண்டுவருவதற்கான சிறந்த வழிகளில் இதுவும் ஒன்றாகும். 

3. நடைபயிற்சி: 

மனதை அமைதிப்படுத்தவும், உங்கள் கவனத்தை மீட்டெடுக்கவும் ஒரு சிறந்த வழி நடைப்பயிற்சி ஆகும்.  முதலில் மெதுவாக நடந்து செல்லுங்கள். உங்கள் கவனத்தை கால்களை நோக்கி திருப்புங்கள்.  

4. பார்வை தியானம்: 

இது கண்களுக்கும் ஒரு சுத்திகரிப்பு பயிற்சியாகும். இந்த நடைமுறையில், உங்கள் பார்வையை  ஏதேனும் ஒரு பொருள் மீது செலுத்த வேண்டும்.  பார்வையை சரிசெய்ய இது தேவைப்படுகிறது.  ஒரு மெழுகுவர்த்தியின் சுடரை கூட நீங்கள் பார்க்கலாம். ஆரம்பத்தில் கண்களைத் திறந்து, பொருளைப் பார்த்து, பின்னர் கண்களை மூடிக் கொள்ளுங்கள். உங்கள்  ஐந்து புலன்களில், பார்வை மிகவும் சக்திவாய்ந்ததாகும். எனவே, இந்த உணர்வை மனதின் அமைதிக்கு பயன்படுத்துவது முக்கியம்.

5. தளர்வு பயிற்சி: 

தளர்வு பயிற்சி என்பது உடலின் சில பகுதிகளுக்கு கவனம் செலுத்துவது மற்றும் காலில் இருந்து தலை வரை படிப்படியாக உடல் உணர்வுகளை உணர்வது. உடல் உறுப்புகள் ஓய்வெடுக்க இது உதவும். இது  பதற்றத்தை வெளியிடுவதற்கான ஒரு சிறந்த வழியாகும்.

Views: - 38

0

0