வாய்ப்புண்களை சரி செய்ய வேண்டுமா? இந்த எளிமையான முறையை பாலோ பண்ணுங்க போதும் !

12 February 2020, 4:49 pm
Cold-Sore-in-the-Lip updatenews360
Quick Share

வாய்ப்புண் ஏற்படுவதற்கு பலவிதமான  காரணங்கள் இருக்கின்றது அதில் பித்த அஜீரணம்,மலச்சிக்கல், உடற்சூடு, வைட்டமின் சி, பி12,  போன்றவை உடலில் சத்து பத்தமால் இருப்பதே காரணமாகும்

அதுமட்டுமில்லாமல்  வீரியம் மிக்க மருந்துகள், மாத்திரைகளை உட்கொள்ளுதல், ஒவ்வாமை போன்ற  காரணங்களாலும் வாய்ப்புண்கள் உருவாகின்றன.

வாய்ப்புண்  வரக்காரணம்:

 • வெற்றிலை, புகையிலை, புகைபிடிப்பவர்கள், மது அருந்துபவர்கள், பான் மசாலா போடுபவர்கள், சர்க்கரை நோயாளிகள்  ஆகியோருக்கு எளிதில் வாய்ப்புண் வந்துவிடும். அதுமட்டுமில்லாமல் போதைப் பொருட்கள் அதிகமாக எடுத்துக்கொள்பவர்களுக்கு வாய்ப்புண்  எளிதில் வந்துவிடும்.
 • வாயைச் சுத்தமாக  வைத்து கொள்ளாமல் இருப்பவர்கள், குடல், இரைப்பையில் புண் உள்ளவர்களுக்கும்  வாய்ப்புண் எளிதில் வந்துவிடும்.
 •  மனஅழுத்தம், ஆக்ரோஷ குணமுடையவர்களுக்கு வாய்ப்புண்  அடிக்கடி வர வாய்ப்புள்ளது.
 • பல்   துலக்கும்   போது பிரஷால்   இடத்துக்குகொள்பவர்கள் மற்றும்  டீ,காபியை சூடாக குடிப்பவர்களுக்கும்  வாய்ப்புண் எளிதில்வந்துவிடும்

எதை  உண்ணலாம், எதை  உண்ணக்கூடாது:

 • வாய்ப்புண்  உங்களுக்கு இருந்தால்  பச்சைமிளகாய், புளிப்புச் சுவையுடைய உணவுகள்  போன்றவற்றை தவிர்ப்பது உங்கள் உடலுக்கு நன்மை பயக்கும்.
 • இனிப்பு, கசப்பு, துவர்ப்பு  சுவையுடைய உணவுகளை உடலுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளலாம்.
 • வெல்லம்  மற்றும் பாசிப்பயிறு  ஆகியவற்றை சேர்த்து கஞ்சியாக  செய்து குடிக்கலாம். 
 • தேங்காய்ப்பால், பீர்க்கங்காய், புடலங்காய்,  கீரை, போன்ற உணவுகளை வேக வைத்து சாதத்தில் பிசைந்து உண்பது நல்லது.
 • பசும்பால்  குடிக்கலாம்.நெல்லிக்காயை  சாப்பிடலாம், ஆனால் கொஞ்சம்   துவர்ப்பாக இருக்கும்.
 • வெள்ளைப் பூசணிக்காய் அல்லது அகத்திக்கீரையைச் நன்கு  வேக வைத்து உண்டால் உடனே புண் குணமடைந்துவிடும்.
 • முருங்கைக்கீரை பூ, சிறுகீரையை பொரியலாக   வறுத்து உண்ணலாம். கொய்யா இலைகளை மென்று துப்பினால்   புண் விரைவில் குணமடையும்.
 • அதிமதுரப் பொடி மற்றும் கடுக்காய் பொடியை  தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் புண் விரைவில் குணமடையும்.

 • வாயை  கொப்பளிப்பது:
 • வாய்ப்புண்   இருக்கும் இடங்களில்   தேனை தடவலாம்.
 • தேங்காய்  பால் குடிக்கலாம்.
 • கொட்டைப்பாக்கை   தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரில்   வாய் கொப்பளிக்கலாம்.
 • ரோஜா  இதழ்களை   அதே போல் நீரில்  போட்டு கொதிக்க வைக்க   வேண்டும். பின்பு இந்த நீரில் வாய்   கொப்பளித்தால் வாய்ப்புண் குணமாகும்.