கர்ப காலத்தில் ஏற்படும் முதுகு வலியை இயற்கையான முறையில் சமாளிப்பது எப்படி…???

20 April 2021, 4:30 pm
Quick Share

கர்ப்ப காலத்தில் உங்கள் உடல் பல ஹார்மோன் மாற்றங்களைச் சந்திப்பதால் முதுகுவலி முற்றிலும் இயல்பான ஒரு  நிகழ்வு ஆகும். உங்கள் எடை ஒருபுறம் அதிகரிக்கும். உங்கள் இடுப்பின் மூட்டுகளில் உள்ள தசைநார்கள் ஹார்மோன்களால்  தளர்த்தப்படுவதால், உங்கள் முதுகில் வலி ஏற்படும்.

கர்ப்ப காலத்தில் ஏற்படும் முதுகுவலி பெல்விக் கர்டில் வலி (Pelvic Girdle Pain- PGP) என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கீழ் முதுகு பகுதியிலிருந்து பரவுகிறது மற்றும் உங்கள் இடுப்பு மற்றும் பிறப்புறுப்பு எலும்பு வரை செல்கிறது.

இருப்பினும், முதுகுவலியிலிருந்து மீளவும், செயல்முறையை எளிதாக்கவும் சில இயற்கை மற்றும் எளிதான வழிகள் உள்ளன. அது குறித்து இப்போது பார்க்கலாம்.

1. உடற்பயிற்சி: 

உடற்பயிற்சி செய்வது வலியைக் குறைக்க உதவும். தசைகளை செயல்பாட்டில் வைப்பது அவசியம். உங்கள் தோரணையை வலுப்படுத்த உதவும் ஸ்குவாட் போன்றவற்றை  நீங்கள் முயற்சி செய்யலாம்.

2. ஆழமான சுவாசத்தை பயிற்சி செய்யுங்கள்: 

கர்ப்ப காலத்தில், அதிக எடை அதிகரிப்பதால் உறுப்புகளில் சுருக்கம் ஏற்படும். இது விலா எலும்பு மற்றும் முதுகில் வலியை ஏற்படுத்தும். ஆழ்ந்த சுவாசம் அந்த தசைகளை தளர்த்தவும், உங்கள் உறுப்புகளை ரிலாக்ஸ் செய்யவும் உதவும்.

3. மசாஜ் செய்யுங்கள்: 

வலியைக் குறைக்கவும் ரிலாக்ஸ்க உணரவும் வழக்கமான மசாஜ் செய்யுங்கள். ஒரு நல்ல மசாஜ் செய்வது முதுகு வலியில் இருந்து மீண்டு வர உதவும். மசாஜ் சிகிச்சை முதுகு  வலியைக் குறைக்க உதவுகிறது.

4. ஒரு மகப்பேறு பெல்ட்டைப் அணிந்து கொள்ளுங்கள்: 

இது உங்கள் கீழ் முதுகு மற்றும் இடுப்பில் உள்ள இடுப்பு வலியைக் குறைக்க உதவுகிறது. தசைநார்கள், தசைகள் ஆகியவற்றிற்கு ஒரு சப்போட்டாக இருக்க  மகப்பேறு பெல்ட் உதவுகிறது. முதுகுவலியைத் தவிர்க்க இதனை அடிக்கடி அணிய வேண்டும்.

5. நல்ல தோரணையை பயிற்சி செய்யுங்கள்:

உங்கள் தோரணையில் மாற்றங்களைக் கொண்டு வந்து சிறிது நேரம் அதைப் பின்பற்றுங்கள். உதாரணமாக உட்கார்ந்து கொள்வது அல்லது நிற்பது போன்ற உங்கள் தோரணையை மாற்றிப்  பாருங்கள். இது உங்கள் முதுகில் ஒரு தாக்கத்தை உருவாக்கும். எனவே, வலியைக் குறைக்க உதவும்.

Views: - 31

0

0