காய்கறி வெட்டுற சாப்பிங் போர்டுல இவ்வளவு பெரிய ஆபத்து மறைந்து இருக்குதா…???
Author: Hemalatha Ramkumar14 October 2024, 11:00 am
சமையலறை சுகாதாரம் பற்றி பேசும் போது சாப்பிங் போர்டில் நீங்கள் நினைப்பதை விட அதிக பாக்டீரியா இருக்கலாம் என்பதை நீங்கள் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டீர்கள். ஆனால் சொல்லப்போனால் ஷாப்பிங் போர்டில் கழிவறையில் இருப்பதை விட அதிக பாக்டீரியாக்கள் இருக்கக்கூடும். ஆம், உண்மைதான் ஷாப்பிங் போர்டுகளில் ஈ -கோலை மற்றும் சால்மோனெல்லா போன்ற தீங்க விளைவிக்கும் பாக்டீரியாக்கள் அதிகமாக இருக்கலாம். குறிப்பாக உங்களுடைய சாப்பிங் போர்டில் நீங்கள் இறைச்சிகளை வெட்டுவீர்கள் என்றால் நிச்சயமாக அது பாக்டீரியாக்கள் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
கழிவறையுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது குறிப்பாக மரத்தால் செய்யப்பட்ட சாப்பிங் போர்டுகளை சரியாக சுத்தம் செய்து வைக்காவிட்டால் அது பாக்டீரியா வளர்ச்சிக்கான கூடாரமாக மாறிவிடுகிறது. மரத்தில் பாக்டீரியாக்கள் எளிதில் நுழைந்து அதன் உள்ளே உள்ள விரிசல்களில் பன்மடங்காக அதிகரித்து அதனால் தொற்று ஏற்படும் அபாயம் அதிகமாகிறது. ஆகவே சாப்பிங் போர்டை சரியாக சுத்தம் செய்வது மிகவும் அவசியம்.
கழிவறையில் உள்ள மலத்தில் இருக்கும் பாக்டீரியாக்களை விட கட்டிங் போர்டில் பாக்டீரியாக்கள் அதிகமாக இருக்கலாம் என்று சொல்வதற்கு ஒரு காரணம் உள்ளது. ஏனென்றால் பச்சை இறைச்சியை வெட்டும் பொழுது அங்கு பாக்டீரியாக்கள் சாப்பிங் போர்டின் மேற்பரப்பில் பிடித்து வைக்கப்படுகின்றன.
இதையும் வாசிச்சு பாருங்க: PCOS இருந்தா டயாபடீஸ் வருமா… என்ன பெரிய குண்ட தூக்கி போடுறீங்க!!!
கழிவறையை பொறுத்தவரை அதனை நாம் கிருமி நாசினி பயன்படுத்தி சுத்தம் செய்து விடுகிறோம். ஆனால் சாப்பிங் போர்டை அவ்வாறு நாம் சுத்தம் செய்வதில்லை. ஆகவே ஷாப்பிங் போர்டை சரியான முறையில் எப்படி சுத்தம் செய்வது என்பதை முதலில் தெரிந்து கொள்ளலாம்.
பாக்டீரியாக்கள் வளர்ச்சியை தவிர்ப்பதற்கு சாப்பிங் போர்டுகளை சரியான முறையில் சுத்தம் செய்ய வேண்டும். சாப்பிங் போர்டுகளை பயன்படுத்திய உடனேயே சுடுதண்ணீர் மற்றும் டிஷ் வாஷ் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். அதிலும் குறிப்பாக இறைச்சிகளை நீங்கள் வெட்டிய பிறகு உடனடியாக அதனை கழுவி விடுவது அவசியம். மேலும் வெள்ளை வினிகர் அல்லது எலுமிச்சை சாறு போன்ற இயற்கை கிருமி நாசினிகளை பயன்படுத்துவது இன்னும் கிருமிகளை திறம்பட அழிப்பதற்கு உதவும்.
அவ்வப்போது உங்களுடைய சாப்பிங் போர்டை தண்ணீரில் கரைக்கப்பட்ட ப்ளீச்சிங் சொல்யூஷன் பயன்படுத்தி சுத்தம் செய்யுங்கள். ஒவ்வொரு முறை சாப்பிங் போர்டை கழுவிய பிறகு அதனை நன்கு காய வைப்பதும் அவசியம். ஏனெனில் ஈரப்பதம் இருந்தால் அங்கு பாக்டீரியாக்கள் எளிதாக வளர்ச்சி அடையும். அதுமட்டுமல்லாமல் அவ்வப்போது சாப்பிங் போர்டுகளை மாற்றுவதும் முக்கியம். ஏனெனில் பாக்டீரியாக்கள் சாப்பிங் போர்டுகளில் உள்ள விரிசல்கள் அல்லது ஓட்டைகள் போன்றவற்றில் மறைந்திருக்கலாம். இந்த விஷயங்களை பின்பற்றுவது சாப்பிங் போர்டு மூலமாக பாக்டீரியல் தொற்று ஏற்படுவதை தவிர்க்க உதவும்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
0
0