வியாதிக்கு பூட்டு போடும் நாட்டு மாட்டுப்பாலின் அசர வைக்கும் நன்மைகள்!!!

Author: Udayaraman
6 January 2021, 8:37 pm
Quick Share

நாட்டு மாடுகள் பற்றி நிச்சயமாக உங்களுக்கு நிறைய விஷயங்கள் தெரிந்திருக்கும். பசு மாடு நம் நாட்டில் கடவுள் போல பார்க்கப்படுகிறது. பசுக்களை அடக்கிய சிற்பங்கள் பலவற்றை இன்றும் கோயில்களில் நாம் பார்க்கலாம். மாடுகள் எவ்வளவு மகத்துவம் வாய்ந்ததோ அந்த அளவிற்கு அவை தரும் பாலும் ஏகப்பட்ட நன்மைகளை உள்ளடக்கி உள்ளது. அது என்ன என்பதைப் பற்றி இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம் வாங்க…

★அந்த காலத்தில் நாட்டு மாட்டின் பால் அல்லது தயிரை கலயத்தில் கட்டிகொண்டு அமாவாசை அன்று கோவிலுக்கு செல்வது வழக்கம். இந்த அபிசேக தயிரை ஒரு வெள்ளை துணியில் கட்டி வைத்து அதில் உள்ள திரவங்கள் வடியுமாறு விட்டு விடுவார்கள். இதன் மூலம் கிடைக்கும் மாவுப் பொருளை பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டது. 

★நாட்டு மாட்டுப்பாலின் விசேஷம் என்னவென்றால் இதில் உயர் ரக சத்தான A2 புரதத்தை கொண்டுள்ளது. அதுவே கலப்பின மாடுகளில் நோய் மூலக்கூறு கொண்ட A1 புரதம் காணப்படுகிறது.

★கலப்பின மாட்டுப்பாலை பருகுவதினால் சர்க்கரை நோய், மரபின கோளாறுகள் உட்பட பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதிகமாக பால் கரக்கும் என்ற ஒரே நோக்கத்திற்காக கலப்பின மாடுகளை பலர் வளர்த்து வருகின்றனர். இது முற்றிலும் ஆபத்தை விளைவிக்கும். 

★மேலும் கலப்பின மாட்டுப்பாலை குடிக்கும் ஆண்களுக்கு பாலியல் ஹார்மோன் குறைபாடுகளும், வீரியம் குறைதலும் ஏற்படுகிறது. 

★அதே போல பெண்களுக்கு சீரற்ற ஹார்மோன் சுரப்பு, மாதவிடாய் கோளாறுகள், உணர்ச்சி பெருக்கு மற்றும் பால் சுரப்பு போன்ற ஏகப்பட்ட பிரச்சினைகளில் முடிவடைகிறது. 

★இதனால் ஏற்படும் விளைவுகள் இன்னும் மோசமானவை. தாம்பத்தியத்தில் ஆரம்பித்த பிரச்சினை விவாகரத்தில் முடிந்து விடுகிறது. தற்காலிக குடும்ப சீரழிப்பிற்கு இந்த கலப்பு மாடுகளும் ஒரு காரணம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

★இந்தியா முழுவதும் உள்ள ஏராளமான பணக்காரர்கள் நூற்றுக்கணக்கான நாட்டு மாடுகளை வளர்த்து வருகின்றனர் என்பது நம்மில் பலருக்கு தெரியாது. 

★நாட்டு மாடுகள் மூலமாக பெறப்படும் உணவு சாத்வீகமானது. அதனை தொடர்ந்து சாப்பிடும் நமக்கு நல்ல குணம், ஒழுக்கம், மன நிம்மதி கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. 

★நாட்டு மாடுகளால் ஏற்படும் நலன் ஒரு புறம் இருந்தாலும் கலப்பின மாட்டு பாலினால் ஏற்படும் பிரச்சினைகள் எண்ணில் அடங்காதவை. இந்த காரணத்தை நன்கு உணர்ந்த வெளிநாட்டவர்கள் தற்போது A1 பால், A2 பால் என பிரித்து விற்க தொடங்கி விட்டனர். 

ஆனால் நாட்டு மாடுகளின் நலன்களை முற்றிலும் அறிந்த பிறகும் கலப்பின மாடுகள் அதிகப்படியான பால் தருகிறது என்ற ஒரே காரணத்திற்காக அதனை வளர்த்து வருகிறோம். இனியாவது இந்த எண்ணத்தை மாற்றி எஞ்சியுள்ள நாட்டு மாடுகளையாவது பாதுகாப்போம்.

Views: - 51

0

0