காபியை இந்த மாதிரி குடித்தால் உடல் எடையை குறைக்கலாம்!!!

Author: Hemalatha Ramkumar
20 May 2023, 6:32 pm
Quick Share

நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறீர்கள் என்றால், நீங்கள் ஆசை ஆசையாய் பருகும் ஒரு கப் காபியை வைத்தே உங்கள் உடல் எடையை எளிதாக குறைக்கலாம். மிதமாக உட்கொள்ளும் போது காபி ஒரு ஆரோக்கியமான பானமாகும்.

இந்தக் பதிவில், உடல் எடையைக் குறைக்க எப்படி காபி குடிப்பது என்பதைப் பார்க்கலாம். காபி வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், அதிக கலோரிகளை எரிக்கவும் உதவுகிறது. இது பசியைக் குறைக்க உதவுகிறது. மேலும், காபியில் உள்ள காஃபின் ஆற்றல் அளவை அதிகரிக்க உதவுகிறது, பகலில் நீங்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கவும் உதவுகிறது.

காஃபின் ஒருவரின் வளர்சிதை மாற்றத்தை 3-11% அதிகரிக்கிறது. மேலும் இது சேமிக்கப்பட்ட கொழுப்பிலிருந்து கொழுப்பு அமிலங்களின் வெளியீட்டை அதிகரிக்கிறது. பசியைத் தூண்டுவதற்குப் பொறுப்பான ஹார்மோனான கிரெலின் விளைவுகளைத் தடுப்பதன் மூலம் உங்கள் பசியைக் குறைக்க காஃபின் உதவும்.

எடை இழப்புக்கு கிரீம், சர்க்கரை சேர்க்காத காபியை பருக வேண்டும். எடை இழப்புக்கு பிளாக் காபி சிறந்தது. சுவையை அதிகரிக்க சர்க்கரை இல்லாத பாதாம் பால் அல்லது தேங்காய்ப் பால் சேர்க்கலாம்.

காஃபினை அதிக அளவில் எடுப்பது நடுக்கம், தலைவலி மற்றும் பிற விரும்பத்தகாத பக்க விளைவுகளை ஏற்படுத்தும். பக்க விளைவுகளைத் தவிர்த்து காபியில் இருந்து நன்மைகளை மட்டுமே பெற ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு கப் காபியை எடுத்துக் கொள்ளுங்கள்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 308

0

0