பேரீச்சம் பழம் உங்களுக்கு பிடிக்குமா? இதை பாலில் சேர்த்து சாப்பிட்டால் என்னாகும் தெரியுமா?

28 May 2021, 7:34 am
benefits of dates with milk at night
Quick Share

நாம் எல்லோரும் தினசரியாக தவறாமல் இரண்டு பேரீச்சம் பழங்களை சாப்பிட்டால் நமக்கு சிறுநீரக புற்றுநோய், குடல் புற்றுநோய் போன்ற பிரச்சினைகள் எல்லாம் வராது . பேரீச்சம் பழத்தில் தாமிரம், பொட்டாசியம் சத்து, நார்ச்சத்து, மாங்கனீசு, வைட்டமின் B6 மற்றும் மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

இது பல சத்துக்கள் நிறைந்த ஒரு பழம். இந்த பழத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் எல்லோருமே சாப்பிடலாம். இது எல்லோருக்குமே பிடித்த ஒரு பழமாகவும் இருக்கிறது. இந்த பழங்கள் பெரும்பாலும் அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. ஆனால் இப்போது நம்ம ஊர்களிலேயே பலரும் இதை பயிர் செய்ய துவங்கிவிட்டனர். 

சரி, இப்போது நம்ம ஊர் கடைகளிலேயே கிடைக்கும் பேரீச்சம் பழத்தை பாலுடன் சேர்த்து சாப்பிடுவதால் என்ன நன்மைகள் நமக்கு கிடைக்கும் என்பதை  தெரிந்துக்கொள்வோம்.

செய்முறை

 • முதலில் இரண்டு பேரீச்சம் பழங்களை  எடுத்து கொட்டைகளை அகற்றிவிடுங்கள். பின்னர் அதை ஒரு டம்ளர் பாலில் போட்டு நன்கு கொதிக்க வையுங்கள்.
 • பால் சிறிது குளிர்ந்த பிறகு, அதனுடன் சிறிது தேன் கலந்து குடிக்கலாம். அதோடு பாலில் வேகவைத்த பேரீச்சம் பழங்களையும் சாப்பிடுங்கள்.

நன்மைகள் 

 • படுக்கைக்குச் செல்வதற்கு முன் இப்படி ஆண்களும் பெண்களும் இரவில் குடிக்கலாம்.
 • இப்படி குடிப்பதால் கர்ப்பிணிப் பெண்களுக்கு மற்றும் ரத்த சோகை உள்ள பெண்களுக்கு உடலின் ரத்த சுரப்பு அதிகமாவதோடு, அசிரிக்கை, சோம்பல் போன்ற பிரச்சினைகள் இல்லாமல் இருக்கலாம். 
 • அதோடு கர்ப்பிணி பெண்கள் பேரீச்சம் பழங்களை தேனுடன் கலந்து சாப்பிடுவதால் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் பிறக்கும்.
 • ரத்த சோகை உள்ள சில பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் அதிக இரத்தப்போக்கு ஏற்படும். அது போன்ற பிரச்சினை உள்ள பெண்கள் இந்த பேரீச்சம் பழத்தை பால் வேகவைத்து குடித்தால் சீரற்ற மாதவிடாய் பிரச்சினை எல்லாம் சீராகும், அதிக இரத்தபோக்கும் இருக்காது.
 • பேரீச்சம் பழத்தை வேகவைத்த பாலை குடிப்பதால் எலும்புகள் வலுவடையும். அதோடு எலும்பு தேய்மான பிரச்சினையும் ஏற்படாமல் தடுக்க முடியும். சோம்பல் நீங்கி நினைவாற்றல் அதிகரிக்கும்.
 • நரம்பு தளர்ச்சி பிரச்சினை உள்ள ஆண்களுக்கு தாம்பத்திய உறவில் ஈடுபட கஷ்டமாக இருக்கலாம். அது போன்ற  பிரச்சினை இருப்பவர்கள் இந்த பால் குடித்தால் நரம்பு மண்டலம் இயல்பாகும். 
 • ஆண்கள் பெண்கள் இருவருக்கும் மலட்டுத்தன்மை பிரச்சினை நீங்கும். 
 • சளி தொல்லையாலும், இருமலாலும் அவதிப்படுபவர்கள் இந்த பேரீச்சம் வேகவைத்த பாலை குடிக்கலாம். வயிற்றுப்போக்கு பிரச்சினை இருப்பவர்களும் இந்த பாலைக் குடிப்பதால் வயிறு சம்பந்தமான பிரச்சினைகள் குணமாகும்.
 • மது பழக்கத்திற்கு அடிமையாக இருப்பவர்களுக்கு, இந்த பால் ஒரு அருமருந்தாக இருக்கும். அதோடு இந்த பேரீச்சம் பால் உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி ஒரு சிறந்த மருந்தாக பயன்படும்.
 • இதை அடிக்கடி குடிப்பதால் மலச்சிக்கல் பிரச்சினை நீங்கும். இரத்த அழுத்தம் குணமடையும்.

Views: - 315

3

1