எல்லா சத்துக்களும் ஒரே பழத்துல இருக்கும் போது நம்ம ஏன் இனி கவலைப்படணும்!!!

Author: Hemalatha Ramkumar
9 June 2023, 4:29 pm
Quick Share

Images are © copyright to the authorized owners.

Quick Share

உலகில் அதிகமாக உண்ணப்படும் பழங்களில் வாழைப்பழம் முக்கிய இடத்தை கொண்டுள்ளது. இதற்கு காரணம் இதில் உள்ள அதிகப்படியான விட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள். மேலும் இது மற்ற பழங்களுடன் ஒப்பிடும்போது மிக குறைந்த விலையில் கிடைக்கிறது. வாழைப்பழங்களில் பல வகைகள் உள்ளது அவற்றின் ஒன்று செவ்வாழை ஆகும். செவ்வாழை உண்பதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் ஒரு சிலவற்றை பார்ப்போம்.

செவ்வாழைப் பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் சி, நார் சத்துக்கள், பொட்டாசியம், மக்னீஷியம், பீட்டா கரோட்டின், தையமின், ஃபோலிக் ஆசிட் போன்ற வைட்டமின்கள் மற்றும் தாதுக்ககள் அதிகமாக உள்ளது.

இதிலுள்ள அதிகப்படியான நார்ச்சத்துக்கள் நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை எரித்து கொழுப்பை குறைக்க உதவுகிறது. மேலும் நாம் உண்ணும் உணவுப் பொருட்களை எளிதில் ஜீரணம் செய்து உடலுக்கு தேவையான சக்தியினை அளிக்கின்றது.

செவ்வாழையில் பொட்டாசியம் அதிகமாகக் காணப்படுகிறது. இது சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதை தடுக்கிறது. இது தவிர, இதய நோய்கள் மற்றும் புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது. செவ்வாழையில் உள்ள உயர்தர பொட்டாசியம் சிறுநீரக கற்கள் வருவதை தடுக்கும்.

செவ்வாழையில் உள்ள அதிகப்படியான கால்சியம் சத்து நம் உடலில் உள்ள பற்கள் மற்றும் எலும்புகளை வலுவாக்குகிறது. எனவே எலும்புகள் உறுதியாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் தினமும் ஒரு செவ்வாழை பழத்தை சாப்பிடுங்கள். நம் உடலில் உள்ள தசைகள் மற்றும் நரம்புகளை வலுவானதாக்கி நரம்பு தளர்ச்சியால் ஏற்படும் ஆண்மை குறைவையும் போக்குகிறது.

நம் உடலில் உள்ள ஹீமோகுளோபின் குறைவதால் ரத்த சோகை ஏற்பட்டு பலவிதமான நோய்கள் நம்மை தாக்குகின்றன. எனவே இரத்த சிவப்பணுக்களின் அளவை உயர்த்துவது அவசியமாகும். செவ்வாழை தொடர்ந்து உண்பதால் ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் அதிகரிக்கிறது.

செவ்வாழையில் உள்ள வைட்டமின்கள், ஆண்டி ஆக்ஸிடென்ட்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் புற்றுநோய் செல்களை அழித்து நமக்கு புற்றுநோயிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது.
பொதுவாக நீரிழிவு நோயாளிகள் ஜிஐ குறியீடு அளவு 55க்கும் கீழே உள்ள பழங்களையே உண்ணுவது நல்லது. செவ்வாழையில் ஜிஐ 45 ஆகும். எனவே இது நீரிழிவு நோயாளிகளுக்கும் உகந்த உணவாக அமைகிறது.

செவ்வாழையில் இருக்கக்கூடிய வைட்டமின் `ஏ’ சத்துக்கள், கண்களில் ஏற்படக்கூடிய கண் சிவத்தல், கண் எரிச்சல், கண்களில் நீர் வடிதல் போன்ற பிரச்னைகளைச் சரிசெய்கிறது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 139

0

0