சாப்பிட்டவுடன் வெல்லம் சாப்பிடுவதால் இம்புட்டு பலன்களா???

Author: Hemalatha Ramkumar
20 May 2023, 7:39 pm
Quick Share

Images are © copyright to the authorized owners.

Quick Share

நமது முன்னோர்கள் காலை எழுந்தவுடன் ஒரு கிளாஸ் தண்ணீரில் சிறிது வெல்லம் கலந்து குடித்துவிட்டு அன்றைய நாளை தூங்குவார்கள் என்று ஒரு பேச்சு உண்டு. இப்படி செய்வதால் அன்றைய நாள் முழுவதும் செரிமான அமைப்பு சீராக வேலை செய்யும்.

ஏனென்றால் இதில் எக்கச்சக்கமான ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளது. உணவு சாப்பிட்ட பிறகு வெல்லம் சாப்பிடுவது பல மருத்துவ குண நலன்களை தருகிறது. இது குறித்து விரிவாக பார்ப்போம்.

உணவிற்குப்பின் வெல்லம் சாப்பிடுவது செரிமான மண்டலத்தை பலப்படுத்துகிறது. வாயு, அஜீரணம் போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் தருகிறது. மேலும் நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வெல்லத்தில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்து உள்ளதால் நமது உடலில் உள்ள எலும்புகளை வலிமையாக மாற்றுகிறது.

இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு வெல்லம் ஒரு மிகச்சிறந்த மருந்தாகும். உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல் வெள்ளத்திற்கு உள்ளது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் உணவிற்குப்பின் வெல்லத்தை தொடர்ந்து சாப்பிட்டு வருவது அவர்களுக்கு நல்ல பலனை தரும்.

வெல்லம் தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் சீராக குறைக்கப்பட்டு உடல் எடை மெதுவாக குறைக்கப்படுகிறது.
இரத்தசோகை உள்ளவர்கள் வெல்லத்தை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். வெல்லத்தில் இரும்புச்சத்து மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை அடங்கியுள்ளன. இவை இரத்த சோகையை போக்குவதோடு உடலில் உள்ள இரத்தத்தின் அளவை அதிகரிக்க செய்கிறது.

உடலில் இரத்தம் குறைவாக உள்ளவர்கள் கண்டிப்பாக வெல்லம் சாப்பிட வேண்டும்.
வெல்லம் செரிமானத்தை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் பசியை நன்கு தூண்டுகிறது. மலச்சிக்கல் உடையவர்கள் வெல்லத்தை சாப்பிடலாம். ஏனெனில் வெல்லம் ஒரு நல்ல மலமிளக்கியாகவும் செயல்படுகிறது.

இருப்பினும் வெல்லம் சாப்பிட்டவுடன் தண்ணீரைக் கொண்டு வாயை கொப்பளித்து சுத்தம் செய்வது நல்லது. ஏனெனில் வெல்லத்தின் துகள்கள் பற்களுக்கு இடையில் இருந்து கொண்டு பல் சொத்தைகளை உருவாக்க நேரிடும். எனவே வெல்லம் சாப்பிட்டவுடன் நன்றாக வாய் மற்றும் பற்களை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 282

0

0