நம் வீட்டில் உள்ள அஞ்சறைப்பெட்டியில் கட்டாயமாக வெந்தயம் இருக்கும். மிக முக்கியமான ஒரு மசாலா பொருளாக கருதப்படும் வெந்தயம் நமது ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை அளிக்கிறது. வெந்தய விதைகளில் கரையும் நார்சத்து, புரோட்டீன் மற்றும் வைட்டமின்கள் இருப்பதால் இது நம்முடைய ஆரோக்கியத்திற்கு ஒரு பொக்கிஷமாக அமைகிறது. வெந்தயத்தை இரவு ஊற வைத்து காலை அந்த ஊற வைத்த வெந்தயத்தோடு உள்ள தண்ணீரையும் சேர்த்து பருகும் பொழுது நம்முடைய ஆரோக்கியத்தில் பல மாயாஜாலங்கள் நிகழ்கிறது. அது என்னென்ன மாதிரியான நன்மைகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
செரிமானத்தை மேம்படுத்துகிறது
வெந்தய விதை நீரானது செரிமான பிரச்சனைகளை சரி செய்கிறது. வயிற்று உப்புசம் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் வெந்தயத்தை ஊற வைத்து அதன் தண்ணீரை தினமும் குடித்து வந்தால் பத்தே நாட்களில் இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். வெந்தயத்தில் கரையும் நார்ச்சத்து மற்றும் மியூசிலேஜுகள் இருப்பதால் இது வீக்கத்தை குறைத்து கார்போஹைட்ரேட் செரிமானத்தை மெதுவாக்குகிறது. வழக்கமான முறையில் இதனை நீங்கள் குடித்து வந்தால் செரிமான நொதிகள் தூண்டப்பட்டு, நீங்கள் சாப்பிடும் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சிறந்த முறையில் உறிஞ்சப்படும். அது மட்டுமல்லாமல் குடலில் ஆரோக்கியமான நுண்ணுயிரிகள் சமநிலை பராமரிக்கப்படும்.
ரத்த சர்க்கரை அளவுகள் சீராகும்
வெந்தய தண்ணீரை பருகிய பிறகு உங்களுடைய உடலில் செரிமானம் மெதுவாக்கப்பட்டு, கார்போஹைட்ரேட்டுகள் மிக பொறுமையாக உறிஞ்சப்படுகிறது. வெந்தய விதைகளில் உள்ள ஆக்டிவ் காம்பவுண்டுகள் இன்சுலின் உற்பத்தியை தூண்டி, குளுக்கோஸ் சிறந்த முறையில் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்கிறது. காலையில் இந்த தண்ணீரை பருகுவது வகை 2 நீரழிவு நோய்க்கான ஒரு இயற்கையான தீர்வாக அமைகிறது.
சரும அமைப்பை மேம்படுத்துகிறது
இது ஒரு டீடாக்ஸ் பானமாக அமைவதால் உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேற்றப்பட்டு உங்களுடைய தோல் சுத்தமாக, பொலிவாக மற்றும் அழகாக மாறும். சருமத்தில் உள்ள தேவையற்ற வீக்கம் குறைந்து, சருமத்தின் அமைப்பு மேம்படும். ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகம் உள்ள வெந்தய விதைகள் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடி வயதான அறிகுறிகளான மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்களை போக்குகிறது. அது மட்டுமல்லாமல் பருக்கள் ஏற்படுவதை தடுத்து, உங்களுடைய சருமத்திற்கு புதுப்பொலிவை அளிக்கிறது.
மேலும் படிக்க: சீசன் மாறுது… ஹெல்தியா இருக்க அதுக்கு ஏத்த மாதிரி இதெல்லாம் மாத்த வேண்டாமா???
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலமாக தொற்றுகளுக்கு எதிராக சண்டை போடுகிறது. நோய் எதிர்ப்பு செல்கள் தூண்டப்பட்டு, நமது உடலுக்கு இயற்கையான சண்டையிடும் தன்மை அதிகரிக்கிறது. வெந்தய விதைகளில் உள்ள பாலிபீனால்கள் ப்ரீ ரேடிக்கல்களை சமநிலையாக்கி தொற்றவர்களுக்கு எதிராக உடலின் எதிர்ப்பு திறனை அதிகரிக்கிறது.
இதய ஆரோக்கியத்திற்கு நல்லது
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த நினைப்பவர்களுக்கு இந்த வெந்தய நீர் பானம் ஒரு அற்புதமான பானமாக அமைகிறது. இந்த பானம் கொலஸ்ட்ரால், ட்ரை கிளிசரைடுகள் மற்றும் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. வெந்தய விதைகளில் கரையும் நார்சத்து, சப்போனின் மற்றும் பொட்டாசியம் இருப்பதால் இது ரத்த நாளங்கள் சேதமடைவதை தடுத்து, கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, இதயத்தின் சீரான செயல்பாட்டை உறுதி செய்கிறது. எனவே இது இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கிறது. இதன் மூலமாக இதய ஆரோக்கியம் மேம்படுகிறது.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.