உங்க பிரேக்ஃபாஸ்ட் மெனுல இந்த பழம் இருந்தா மினுமினுப்பான, இளமையான சருமம் பெறுவது உறுதி!!!
Author: Hemalatha Ramkumar29 November 2024, 2:17 pm
“தேவதைகளின் பழம்” என்று பெரும்பாலும் அழைக்கப்படும் பப்பாளி நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு பெரிய அளவில் பங்களிக்கக்கூடிய ஊட்டச்சத்து மிகுந்த ஒரு உணவு. பப்பாளியில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் இருப்பதோடு இது ஒரு சுவையான பழமாகவும் அமைகிறது. இந்த பழத்தில் நம்முடைய உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் என்சைம்கள் காணப்படுகின்றன. பப்பாளியை காலை உணவில் சேர்த்து சாப்பிடுவது நல்ல சருமம் முதல் செரிமான ஆரோக்கியம் வரை பல வழிகளில் நன்மை தருகிறது. இந்த சுவையான பழத்தை தினமும் காலை பச்சையாகவோ ஸ்மூத்தியாகவும் அல்லது தயிருடன் கலந்தோ சாப்பிடலாம். பப்பாளி பழத்தை காலை உணவில் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து விளக்கமாக தெரிந்து கொள்ளலாம்.
நோய் எதிர்ப்பு சக்தி
நம்முடைய அன்றாட வைட்டமின் C தேவையை பூர்த்தி செய்வதற்கு தேவையான 2 மடங்கு அளவு வைட்டமின் C பப்பாளி பழத்தில் காணப்படுகிறது. இது நம்முடைய உடலை சளி, காய்ச்சல், தொற்றுகள் மற்றும் பிற உடல் நல பிரச்சனைகளுக்கு எதிராக காப்பாற்றுகிறது.
சிறந்த செரிமானம்
பப்பாளி பழத்தில் காணப்படும் பப்பைன் என்ற என்சைம் புரதங்களை உடைத்து செரிமானம் சிறந்த முறையில் நடைபெறுவதற்கு உதவி செய்கிறது.
மினுமினுப்பான சருமம்
பப்பாளியில் அதிக அளவு ஆன்டி-ஆக்சிடன்ட்கள் இருப்பதால் இது நம்முடைய சருமத்தை ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்தில் இருந்து பாதுகாக்கிறது. இதனால் வயதான அறிகுறிகள் மெதுவாக்கப்பட்டு, சருமத்திற்கு காயம் ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது.
இதையும் படிக்கலாமே: ஒரே மாதத்தில் தலைமுடியின் அடர்த்தியை அதிகரித்து காட்டும் இயற்கை வழிகள்!!!
இதய ஆரோக்கியம்
பப்பாளியில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதன் காரணமாக இது கொலஸ்ட்ரால் சமநிலையை பராமரிக்க உதவுகிறது. கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிப்பதற்கு தினமும் உங்களுடைய காலை உணவில் பப்பாளி பழத்தை சாப்பிடுவது நல்லது.
உடல் எடை பராமரிப்பு
பப்பாளியில் நார்ச்சத்து இருப்பதன் காரணமாக இது ரத்த சர்க்கரை அளவை சீராக்கி, திடீர் ரத்த சர்க்கரை அளவுகள் அதிகரிப்பு ஏற்படுவதை தவிர்த்து, நாள் முழுவதும் பசியை கட்டுப்படுத்துகிறது.
வீக்கத்தை குறைக்கிறது
தினமும் பப்பாளி பழத்தை சாப்பிட்டு வர நாள்பட்ட வீக்கத்தால் ஏற்படும் தசை மற்றும் மூட்டு வலியில் இருந்து நிவாரணம் பெறலாம்.
பார்வை திறன்
லியூட்டின் மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற கரட்டினாய்டுகள் பப்பாளி பழத்தில் இருப்பதன் காரணமாக இது பார்வை திறனை அதிகரிப்பதற்கு உதவுகிறது.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.