பல வீடுகளில் இரவு உணவுக்குப் பிறகு, ஒரு நடைபயிற்சிக்கு செல்வது ஒரு வழக்கமாக உள்ளது. பலர் மதிய உணவுக்குப் பிறகும் நடக்கிறார்கள். இது செரிமானத்தை மேம்படுத்த உதவும் என்பது நம்பப்படுகிறது. ஆனால், சாப்பிட்ட பிறகு நடப்பது உண்மையில் செரிமானத்திற்கு நன்மை பயக்குமா?
உங்கள் உணவை முடித்த பிறகு, உங்கள் உடல் வேலை செய்யத் தொடங்குகிறது. உணவை உடைத்து உடலானது ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுகிறது. செரிமானத்தின் குறிப்பிடத்தக்க பகுதி சிறுகுடலில் நடைபெறுகிறது. உணவுக்குப் பிறகு நடப்பது வயிற்றில் இருந்து சிறுகுடலுக்கு விரைவாக உணவுப் பரிமாற்றத்திற்கு உதவும் என்று ஆராய்ச்சி கூறுகிறது.
நம் வயிற்றில் இருந்து சிறுகுடலுக்கு உணவு எவ்வளவு வேகமாக செல்கிறதோ, அந்த அளவு வீக்கம், வாயு மற்றும் அமில ரிஃப்ளக்ஸ் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. மேலும். இதனால் குடல் செயல்பாடு மேம்படலாம் மற்றும் மலச்சிக்கல் உண்டாவதற்கான வாய்ப்புகள் குறையலாம்.
உணவுக்குப் பிறது நடப்பது செரிமானத்தை எளிதாக்குவது மட்டுமல்லாமல், வகை-2 நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
நம் உடலானது உணவை குளுக்கோஸாக மாற்றுகிறது. இது உடலுக்கு ஆற்றலின் முக்கிய ஆதாரமாகும்.
சாப்பிட்ட பிறகு, இரத்த குளுக்கோஸ் அளவு அதிகரிக்கத் தொடங்குகிறது. இந்த அதிகரிப்பைச் சமாளிக்க, உடல் இன்சுலின் சுரக்கிறது. இது குளுக்கோஸை செல்களுக்குள் செலுத்த உதவுகிறது. இருப்பினும், நீரிழிவு நோயாளிகளுக்கு, இன்சுலின் செயல்பாடு பலவீனமடைகிறது. இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்கும் செயல்முறையைத் தடுக்கிறது.
இது இரத்தத்தில் குளுக்கோஸின் அதிக அளவுகளுக்கு வழிவகுக்கும். மேலும் உடல்நலப் பிரச்சினைகளின் அபாயத்தை அதிகரிக்கும். உணவுக்குப் பிறகு நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது, உடலானது குளுக்கோஸை ஆற்றலை உற்பத்தி செய்ய பயன்படுத்துகிறது. இது இரத்தத்தில் குளுக்கோஸின் அளவைக் குறைக்க உதவுகிறது.
சாப்பிட்ட உடனேயே நடப்பது அசிடிட்டி மற்றும் உங்கள் வயிற்றில் கோளாறுகளை ஏற்படுத்தும். உங்கள் மதிய உணவு அல்லது இரவு உணவிற்கு 30-45 நிமிட இடைவெளிக்குப் பிறகு நடப்பது அதிக நன்மைகளைத் தரும்.
தமிழக வெற்றி கழக தலைவரும் நடிகருமான விஜய்க்கு மத்திய அரசு உய்ப்பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது. இந்த நிலையில் அவருக்கு சிஆர்பிஎப்…
காமெடி நடிகர் கவுண்டமணியின் மனைவி திடீரென உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் ஆணித்தரமான கருத்துக்களை காமெடி மூலமாக கொண்டு…
கமல்ஹாசனா இப்படி செய்தது? தனது உலக நாயகன் என்ற பட்டத்தை துறந்தாலும் இன்னும் அவரது ரசிகர்களின் மனதில் உலக நாயகனாகவே…
பொதுவெளியில் பிரபலங்களுக்கு திடீரென சங்கடங்கள் ஏற்படுவது வழக்கம்தான். ஆனால் ஒரு சிலர் அணிந்து வரும் ஆடையும் அப்படி சங்கடத்தை ஏற்படுத்திவிடுகிறது.…
கிரிக்கெட் ஜாம்பவனாக வலம் வருவபர் முன்னாள் இந்திய அணி கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். இவரது மகன் அர்ஜூன் ஒரு…
This website uses cookies.