உலக தாய்ப்பால் வாரம் | குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம் என்ன?

By: Dhivagar
5 August 2021, 10:29 am
Breast milk contains important antibodies
Quick Share

தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தாய்மார்களை தாய்ப்பால் கொடுக்க ஊக்குவிக்கவம் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 7 வரை உலக தாய்ப்பால் வாரமாக கொண்டாடப்படுகிறது.  தாய்ப்பால் கொடுப்பதால் சேய்க்கும் மட்டுமல்லாது தாய்க்கும் பல நன்மைகள் உண்டாகும். தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைக்கு என்னென்ன நன்மைகள் எல்லாம் உண்டாகும், குழந்தைக்கு தாய்ப்பால் எப்படி ஒரு பாதுகாப்பு அரணாக அமையும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

தாய்ப்பாலில் ஆன்டிபாடிகள் நிரம்பியுள்ளன, இது உங்கள் குழந்தைக்கு வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. அதிலும் முக்கியமாக ஆரம்ப மாதங்களில் இது மிகவும் முக்கியமானதாகும்.

குறிப்பாக கொலஸ்ட்ரம் என்று ஆங்கிலத்தில் சொல்லக்கூடிய சீம்பால், குழந்தைகளுக்கு கிடைக்கவேண்டியது மிகவும் அவசியம். சீம்பால் அதிக அளவிலான இம்யூனோகுளோபூலின் A (IgA) மற்றும் பல பிற ஆன்டிபாடிகளை குழந்தைகளுக்கு வழங்குகிறது.

வைரஸ்கள் அல்லது பாக்டீரியா தொற்றுக்களுக்கு ஆளாகும்போது, தாய்ப்​பாலில் இருந்து குழந்தைக்கு கிடைக்கும் ஆன்டிபாடிகள் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி ஓரு பாதுகாப்பு அரணாக திகழும்.

IgA குழந்தையின் மூக்கு, தொண்டை மற்றும் செரிமான அமைப்பில் பாதுகாப்பு அடுக்கை உருவாக்குவதன் மூலம் குழந்தையை நோய்வாய்ப்படாமல் பாதுகாக்கிறது.

என்னதான் செறிவூட்டப்பட்ட உணவுகளை குழந்தைகளுக்கு கொடுத்தாலும் சீம்பால் தருவது போன்ற போதுமான பாதுகாப்பை வழங்க முடியாது. நிமோனியா, வயிற்றுப்போக்கு மற்றும் பல்வேறு தொற்று போன்ற உடல்நலப் பிரச்சினைகளுக்கு தாய்ப்பால் குடிக்காத குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவதாக பல ஆய்வுகள் நம்பகமான ஆதாரங்கள் காட்டுகின்றன.

எனவே, தாய்ப்பாலின் அவசியத்தைப் புரிந்துக்கொண்டு, குழந்தை பிறந்தது முதல் 6 மாதங்களுக்கு தாய்ப்பால் கொடுக்க தாய்மார்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இது குறித்த விழிப்புணர்வும் மக்களிடையே ஏற்பட வேண்டும்.

Views: - 264

1

0