தாய்க்கு கோவிட்-19 தொற்று இருந்தாலும் தாய்ப்பால் தரலாமா?

11 May 2021, 11:32 am
can a Covid positive mother feed her baby
Quick Share

இதற்கு இணையென்று ஏதுமில்லை என்று சொல்லுமளவுக்கு அவ்வளவு சிறப்பு வாய்ந்தது தாய்ப்பால் மட்டுந்தான். இதனால் தாய்க்கு கொரோனா தொற்று இருக்கும் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் தரலாமா என்று சந்தேகத்தில் இருக்கின்றனர். 

கொரோனா நோய்த்தொற்று உள்ள தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்தால் குழந்தைக்கும் கொரோனா தொற்று பரவிவிடுமோ என்று பலரும் அச்சத்தில் இருக்கின்றனர். ஆனால் உலக சுகாதார அமைப்பு இதற்கு சிறப்பான பதில் ஒன்றை வழங்கியுள்ளது. அதன்படி கோவிட்-19 பெருந்தொற்றை விட தாய்ப்பால் மிக சக்தி வாய்ந்தது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. 

சரி, அப்போ கொரோனா இருந்தால் தாய்ப்பால் தரலாமா?

கோவிட்-19 நோய்த்தொற்றுடைய தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பாலை தாராளமாக கொடுக்கலாம். கொரோனா வைரஸை விட தாய்ப்பாலின் சக்தி அதிகமாக இருப்பதால், கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட தாய்மார்கள் தாய்ப்பால் கொடுத்தாலும் கூட இந்த கொடிய நோய் குழந்தைகளுக்கு பரவாது. எனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட அம்மாக்களும் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கலாம்.

சரி, இப்போது தொற்று பரவாது என்று தெரிந்து கொண்டுவிட்டோம். அடுத்து குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஏன் அவசியம் என்பதை தெரிந்துக்கொள்வோம்.

நம்ம ஊரு பாட்டிக்கள் எல்லாம் என் பையனுக்கு எல்லாம் 6 மாதம் வரை ஒரு வருடம் வரை தாய்ப்பால் கொடுத்தேன் என்று சொல்ல கேட்டிருப்போம்.  ஏனெனில் அவர்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவத்தை தெரிந்து வைத்திருந்தனர். 

தாய்ப்பாலில் நீர், கொழுப்பு, கார்போஹைட்ரேட், தாதுக்கள், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், வைட்டமின் A, வைட்டமின் C மற்றும் வைட்டமின் D என பல சத்துக்கள் நிறைந்துள்ளன. 

புதிதாகப் பிறந்த குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஒரே உணவு தாய்ப்பால் மட்டுந்தான் என்பதை இக்கால தாய்மார்களும் புரிந்துக்கொள்ள வேண்டும். தாய்ப்பால் சிறு குழந்தைகளை பெரிய தொற்றுநோய்களிலிருந்தும் கூட பாதுகாக்கிறது. 

எனவே, குழந்தைகளுக்கு குறைந்தது 6 மாதங்களுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

Views: - 169

0

0