கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மது குடிக்கலாமா? வேறு என்னவெல்லாம் செய்யக்கூடாது? மூன்றாம் அலையிலிருந்து தப்பிக்க என்ன செய்யலாம்?

Author: Dhivagar
3 August 2021, 1:09 pm
Can you drink alcohol before or after taking the Covid-19 vaccine
Quick Share

கொரோனா தொற்று பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு, இனிமேல் கொரோனா வரவே வராது என்று எண்ணி பலரும் அஜாக்கிரத்தையாக பல்வேறு செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் தடுப்பூசியினால் ஏற்படும் பக்க விளைவுகள்  மேலும் மோசமடையக்கூடும். எனவே தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பதற்கான பட்டியலை உங்களுக்காக இங்கே பட்டியலிட்டுள்ளோம்.

மது மற்றும் புகையிலையைத் தவிர்க்கவும்: 

மது அருந்துதல் அல்லது புகைபிடிக்கும் பழக்கம் தடுப்பூசியின் விளைவை அதிகரிக்கும்  என்பதற்கான அங்கீகரிக்கப்பட்ட அறிவியல் ஆய்வுகள் எதுவும் இல்லை என்றாலும், புகையிலை அல்லது மது அருந்துவதைத் தவிர்ப்பது நல்லது என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஏனெனில் இவை தடுப்பூசியினால் ஏற்படும் பக்க விளைவுகளை மோசமாக்கி தீவிரமடையச் செய்யும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். 

மது குடித்தால் கொரோனாவே இறந்துவிடும் என எண்ணி தவறான செயல்களில் ஈடுபடுவது உங்கள் உயிருக்கே கூட ஆபத்தாக மாறக்கூடும். மது உங்கள் உடலின் நோயெதிர்ப்பு அமைப்பையும் எதிர்மறையாக பாதிக்கிறது மற்றும் தடுப்பூசி உண்டாக்கவேண்டிய நோயெதிர்ப்பு ஆற்றலையும் சிதைக்கக்கூடும். எனவே, முடிந்தவரை தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு மது மற்றும் புகைபிடிக்கும் பழக்கத்தைத் தவிர்ப்பது நல்லது என்று அறிவுறுத்தப்படுகிறது.

தடுப்பூசி கொரோனாவின் தடுப்பு மருந்து கிடையாது:

தடுப்பூசிக்குப் பிறகு உங்களுக்கு COVID-19 தொற்று முற்றிலுமாக ஏற்படாது என்று நீங்கள் தப்புகணக்கு போட்டுவிடக்கூடாது. எந்த தடுப்பூசியுமே 100 சதவீத வெற்றி விகிதத்தைக் கொண்டிருப்பதில்லை என்பதையும் நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். 

தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகும் உங்களுக்கு COVID-19 தொற்று ஏற்பட வாய்ப்புகள் உண்டு. சரி அப்போ தடுப்பூசி எதற்கு என்றுதானே கேட்கிறீர்கள்? தடுப்பூசி உங்கள் உடலுக்கு கொரோனாவை எதிர்த்து போராட போதுமான நோயெதிர்ப்பு ஆற்றலையும் மருத்துவமனைக்கு செல்லும் அளவுக்கு நிலைமை தீவிரமடையாமல் இருக்கவும், மரணம் ஏற்படாமல் இருக்கவும் மற்றும் தீவிர நோய்கள் ஏற்படாமலும் உங்களை பாதுகாக்கும். எனவே, கொரோனா உங்களுக்கு ஏற்பட்டாலும் உங்கள் நிலைமை தீவிரமடையாமல் இருக்க தடுப்பூசி உங்களுக்கு உதவியாக இருக்கும்.

அறிகுறி ஏற்பட்டால் தான் கொரோனா என்பதில்லை. அறிகுறிகள் இல்லாமல் தொற்று ஏற்படக்கூடும் என்பதால் முகமூடிகள், கை சுத்திகரிப்பு அல்லது சுகாதாரம், மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றுவது போன்ற கோவிட்-19 முன்னெச்சரிக்கைகளை நீங்கள் தொடர்ந்து பின்பற்றுவது மிகவும் அவசியம்.

தடுப்பூசி போட்ட பிறகும் நீங்கள் COVID-19 அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகவும்: 

தடுப்பூசி வேலைச் செய்ய சிறிது நேரம் ஆகும் என்பதால், இரண்டாவது டோஸுக்கு சில வாரங்களுக்குப் பிறகு தான் உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். கையில் வலி அல்லது அசௌகரியம் அல்லது சோர்வு போன்ற பக்க விளைவுகள் பொதுவாக சில நாட்களுக்குள் குறையும். ஆனால் பக்க விளைவுகள் குறையாமல் கடுமையான பக்க விளைவுகள் இருந்தால் அல்லது அறிகுறிகள் குறையவில்லை என்றால் உங்கள் மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தாமதப்படுத்தக்கூடாது.

உடலை வருத்த வேண்டும்

தடுப்பூசி போட்ட பிறகு குறைந்தது 2-3 நாட்களுக்கு உடலை வருத்திக்கொண்டு வேலைச் செய்வதை தவிர்க்க வேண்டும். தடுப்பூசியின் பக்க விளைவுகளிலிருந்து மீள உங்கள் உடலுக்கு நேரம் தேவைப்படுவதால், உடலுக்கு அழுத்தம் கொடுக்கும் வேலைகளைச் செய்யாமல் ஓய்வு எடுக்க அறிவுறுத்தபடுகிறது.

தடுப்பூசிகளைத் தவறவிடாதீர்கள்: 

COVID-19 தடுப்பூசியை போட்டுக்கொள்ளாமல் தவறவிடக்கூடாது. அதே போல ஒரு டோஸ் போட்டுக்கொண்ட பிறகு, கோவிட்-19 தடுப்பூசியின் இரண்டாவது டோஸையும் தவறாமல் போட்டுக்கொள்ள வேண்டும். முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டு குறைந்தது 28 நாட்கள் இடைவெளி விட்டு அடுத்த தடுப்பூசி போட்டுக்கொள்வது நல்லது. தடுப்பூசி போட்டுக்கொள்ளும் முன் ஒரு பயிற்சி பெற்ற மருத்துவரை சந்தித்து ஆலோசனைப் பெறுவது நல்லது.

தகவல் மூலம்: https://www.unicef.org/

Views: - 408

2

0