கேரட் இஞ்சி சூப்: இப்படி செஞ்சு சாப்பிட்டால் நோய் வருமென்று கவலையே இல்லாமல் இருக்கலாம்!

24 May 2021, 4:29 pm
Carrot Ginger Soup Recipe
Quick Share

கேரட் மற்றும் இஞ்சி நாம் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகள்தான். ஆனால், உடலின் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் தன்மை இதற்கு உண்டு. அதுவும் இந்த கொரோனா சமயத்தில் நோயெதிர்ப்பு சக்தி என்பது நம் எல்லோருக்கும் தேவையான  ஒன்று. சரி, நம் உடலின் நோயெதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தும் கேரட் இஞ்சி சூப் பற்றி இப்போது இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.

தேவையான பொருட்கள் 

 • 6 கேரட்களை நறுக்கியது
 • 2 அங்குல இஞ்சி நறுக்கியது
 • 2 தேக்கரண்டி தேங்காய் பால்
 • 4 பல் பூண்டு
 • பிடித்த வேறு சில காய்கறிகள் 3 கப் நறுக்கியது
 • 1 வெங்காயம் பொடியாக நறுக்கியது
 • தேவைக்கேற்ப உப்பு
 • 1 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய்

செய்முறை:

 • இந்த சுவையான சூப்பைத் தயார் செய்ய, மிதமான சூட்டில் அடுப்பை எரியவிட்டு ஒரு பாத்திரத்தை அதில் வைக்கவும். 
 • அதில் எண்ணெய் கொஞ்சம் ஊற்றி சூடாக்கி, அதில் நறுக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சி ஆகியவற்றை சேர்க்கவும். 
 • பூண்டின் பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கவும். 
 • இப்போது, ​​வாணலியில் நறுக்கிய கேரட்களை சேர்த்து நன்கு கிளறவும்.
 • 3-4 நிமிடங்கள் சமைத்த பின்னர் அதில் நறுக்கிய காய்கறிகளையும் சேர்க்கவும். 
 • கேரட் மற்றும் காய்கறிகளை அரை மணி நேரம் வேகவிடுங்கள்.
 • கேரட் முற்றிலும் மென்மையாக வெந்த பின்பு, ​​அடுப்பிலிருந்து பாத்திரத்தை இறக்கவும். சற்று பின் அரைக்கும் மிக்ஸர் ஜாருக்கு அதை மாற்றவும்.
 • ஒரு பாத்திரத்தில் சூப்பை ஊற்றி, சுவைக்கு தேவைக்கு ஏற்ப கொஞ்சம் உப்பு சேர்க்கவும். 
 • கடைசியாக கொஞ்சம் தேங்காய் பால் சேர்க்கவும். 
 • அவ்வளவுதான் ஒரு சிறிய குவளையில் ஊற்றி சூடாக பரிமாறலாம்.  சூடான சுவையான கேரட் இஞ்சி சூப் தயார்.

Views: - 258

1

0