வெள்ளை சர்க்கரை இனி வேண்டாம்…..நீரிழிவு நோயாளிகளும் ஜாலியாக சாப்பிடலாம் தேங்காய் சர்க்கரை….!!!

16 September 2020, 9:24 pm
Quick Share

வெள்ளை சர்க்கரை நம் உடலுக்கு எவ்வளவு தீங்கு விளைவிக்கும் என்பதை இப்போது தான் நாம் கொஞ்சம் கொஞ்சமாக உணரத் தொடங்கியுள்ளோம். அதற்கு பதிலாக நாட்டு சர்க்கரை, பனங்கற்கண்டு, வெல்லம் என பயன்படுத்தி வருகிறோம். ஆனால் உங்களுக்கு தெரியாத இன்னொரு சர்க்கரையும் உள்ளது. அது தான் தேங்காய் சர்க்கரை. தேங்காய் சர்க்கரை ஏராளமான நன்மைகளை கொண்டுள்ளது. தேங்காய் சர்க்கரையில் உள்ள ஊட்டத்தை நலன்களை பற்றி விரிவாக இந்த பதிவில் பார்ப்போம். 

தேங்காய் சர்க்கரையில் நாட்டு சர்க்கரை போலவே கலோரிகள் உள்ளன. அதே சமயம் அதிக அளவில் ஊட்டச்சத்துக்களையும் பெற்றிருக்கின்றது. வெள்ளை சர்க்கரையில் குளுக்கோஸ் மட்டுமே உள்ளது. ஆனால் தேங்காய் சர்க்கரையில் பிரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் ஆகிய இரண்டுமே உள்ளன. 

இரும்புச்சத்து, பொட்டாசியம், ஃபிளவனாய்டுகள், துத்தநாகம், நார்ச்சத்து மற்றும் பாலிபினால்கள் ஆகிய சத்துக்கள் தேங்காய் சர்க்கரையில் நிறைந்து காணப்படுகிறது. இதுவே வெள்ளை சர்க்கரையில் மேற்கூறிய எந்த ஒரு சத்தும் கிடையாது. எனவே சத்துக்கள் நிறைந்த இந்த தேங்காய் சர்க்கரையை நாம் ஏன் தினமும் எடுக்க கூடாது. 

உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்களுக்கு தேங்காய் சர்க்கரை ஒரு வரப்பிரசாதம். ஐந்து கிராம் வெள்ளை சர்க்கரை 40 கலோரிகளை கொண்டுள்ளது. அதே அளவு தேங்காய் சர்க்கரை 20 முதல் 25 கலோரிகள் மட்டுமே பெற்றுள்ளது. 

குடலின் ஆரோக்கியத்தை கவனித்து கொள்ள ப்ரீபயாட்டிகள் நிச்சயம் அவசியம். சீரான செரிமானத்திற்கு இவையே காரணமாக உள்ளன. இதன் மூலம் நமது உடலானது திறம்பட செயல்படுகிறது. இத்தகைய நன்மைகள் அடங்கிய ப்ரீபயாட்டிகள் தேங்காய் சர்க்கரையில் உள்ளது. தேங்காய் சர்க்கரையில் உள்ள ஒரு வகை நார்ச்சத்து தான் ப்ரீபயாட்டிகாக செயல்படுகிறது. இது  செரிமானத்தை தூண்டுவது மட்டும் இல்லாமல் குடலில் ஏற்படும் பிரச்சனைகளிடமிருந்தும் பாதுகாக்கிறது. 

இந்த சர்க்கரையின் ஒரு சிறப்பு என்னவென்றால் இதனை நீரிழிவு நோயாளிகளும் சாப்பிடலாம் என்பது தான். ஏனெனில் இதன் கிளைசெமிக் அளவு 35 ஆக உள்ளது. அதுவே வெள்ளை சர்க்கரையில் கிளைசெமிக் அளவு 60 முதல் 65 வரை உள்ளது. எனவே சர்க்கரை நோயாளிகளும் இதனை ஜாலியாக சாப்பிட்டு வரலாம். இச்சர்க்கரையில் உள்ள இன்சுலின் அதிகப்படியான குளுக்கோஸ்  உறுஞ்சப்படுவதை தடுக்கிறது. 

தேங்காய் சர்க்கரையை ஒரு நாளைக்கு 12 கிராம் அல்லது அதற்கும் குறைவாக எடுத்து கொள்வது சிறந்தது. வெள்ளை சர்க்கரைக்கு ஒரு சிறந்த மாற்றாக விளங்கும் இந்த தேங்காய் சர்க்கரையை நீங்களும் எடுத்து அதன் நன்மைகளை அனுபவியுங்கள்.