மன அழுத்தத்தில் நீங்கள் இருக்கிறீர்களா? இந்த 5 சிம்பிள் டிப்ஸ்-ஐ பாலோ பண்ணுங்க மன அழுத்தம் காணாமல் போய்விடும்!

12 February 2020, 1:39 pm
stress updatenews360
Quick Share

இக்கால   சிறியவர்கள்   முதல் பெரியவர்கள்  வரை சொல்வது நான் மன  அழுத்தத்தில் இருக்கிறேன். என்ன  செய்வதென்று தெரியல என்று, நீங்கள்  அப்படி மண் அழுத்தத்தில் இருக்கிறீர்களா?  உங்களை மன அழுத்தத்திலிருந்து விடுவிக்க சிம்பிளான   டிப்ஸ் உள்ளது  

சொந்த பிரச்சனை மற்றும்  வேலை காரணமாக சிலர் மன  அழுத்ததிற்கு உள்ளாகின்றனர். இதற்காக  அதிகமாக மாத்திரைகள் மற்றும் கடுமையாக  சிலர் யோகா பயிற்சிகள் மேற்கொள்வதுண்டு.  ஆனால் அளவுக்கு அதிகமான மாத்திரைகள் உங்களை  கெட்ட உடல் நலத்திற்கு கொண்டு போய் சேர்த்துவிடும். நீங்கள்  உங்களுக்கு பிடித்த வேலைகளை செய்தால் மன அழுத்தம் குறைய வாய்ப்புள்ளது.

உடற்பயிற்சி :

 எண்டோர்பின்  உங்கள் மூளையில் அதிகமாக   சுரக்கும் போது உங்களுக்கு   மன அழுத்தம் உங்களுக்கு அதிகமாக  உண்டாகிறது. இந்த ஹார்மோனை சரிசெய்ய நீங்கள் உடற்பயிற்சி  மேற்கொள்ளலாம். உடல்பயிற்சி செய்யும் போது இந்த ஹார்மோன்  சரியான அளவு சுரந்து, உடலையும, மனதையும் ஒருநிலைப் படுத்தசெய்கின்றது.

செல்லப் பிராணியுடன்   விளையாடுங்கள் :

உங்களுக்கு   மன அழுத்தம்   அதிகமாக இருக்கும்போது,  உங்களுடைய கஷ்டத்தை யாரிடமாவது   சொல்லி விட வேண்டும், என்ற எண்ணம் உங்களுக்கு  தோன்றும். காரணம் நம் மனதில் உள்ள பாரங்களை யாரிடமாவது  சொல்லிவிட்டால், அது நமக்கு நிம்மதியை தரும் வகையில் இருக்கும்.  அதற்கு நீங்கள் உங்களுடைய செல்லப்பிராணிகளுடன் விளையாடலாம். அந்த விலங்குகளுடன்  நீங்கள் உரையாட துவங்கி, உங்கள் கஷ்டத்தை கூறலாம். அதுமட்டுமில்லாமல் செல்லப் பிராணிகளுடன்   பேசுவது, விளையாடுவது பெரும்பாலான மக்களுக்கு பிடித்தமான ஒன்றே. பிராணிகளுடன் கொஞ்ச தூரம் பேசிக்கொண்டே   வாக்கிங் செய்தால் அது நமக்கு மன நிம்மதியை தரும்.

உணவு   சமையுங்கள் :

இது பெரும்பாலும் பெண்களுக்கு   ஏற்ற ஒன்றாக இருக்கும். காரணம்  நீங்கள் உணவு சமைக்கும் போது கவனம் முழுக்க   சமயலிலே இருக்கும். சிந்தனைகளை வேறு எங்கும்   சிதறவிடாமல் உணவு மேல் உன்னிப்பு மற்றும் கவனத்துடன்  சமைக்க தோன்றும். உணவு சமைக்கும் விஷயமானது பழைய விஷயங்களை   மறந்து இதில் மட்டுமே, ஆர்வத்துடன் செய்லபட வைக்கும்.

கத்தி  அழுதல் :

பெரும்பாலாக  பெண்கள் மன அழுத்தத்தில்  இருந்தால் கத்தி
அழுது, புலம்பி  விடுவார்கள். அழுதால்   அவர்களுக்கு பாதி மன அழுத்தம்  குறைந்துவிடும். ஆனால் ஆண்களோ அப்படியில்லை. காதல், நட்பு, சோகம் என  மற்றதை வெளிப்படுத்தும் ஆண்கள் அழுவதற்கு கூச்சப்படுவார்கள், அதனால்   மன அழுத்தம் இன்னும் அதிகமாகும். அழுது முடித்துவிட்டால் நம் மன அழுத்தம்   பாதி அளவு குறைந்துவிடும்.

உடலுறவு:

சிலருக்கு  உடலுறவு கொள்வதன்   மூலம் மனஅழுத்தத்திலிருந்து விடுபடுகிறார்கள். உடலுறவு   மேற்கொள்ளும் போது மன அழுத்தத்தை குறைத்து, மகிழ்ச்சியை   தரும் எண்டோர்பின் என்ற ஹார்மோன் சுரப்பதால், மன அழுத்தம் நமக்கு   குறைய செய்கிறது. ஒரு ஆண் வேலைப்பழுவின் காரணமாகவோ, மிக மன அழுத்தத்தில்   இருந்தாலோ அவரது மனைவி அரவணைத்து முத்தம் கொடுப்பதால், அவருக்கு மனதில் இருக்கும்  அழுத்தம் குறைந்து மகிழ்ச்சியை தர செய்கின்றது.