சாப்பிட்டவுடன் கண்டிப்பா இதையெல்லாம் செய்யாதீங்க…அப்புறம் உயிருக்கே ஆபத்தாகி விடும்!!!

By: Udayaraman
1 October 2020, 9:16 pm
Quick Share

வயிறு நிறைய சாப்பிட்டவுடன் ஒரு சில நேரங்களில் நாம் அறியாமல் செய்யும் செயல்கள் நமது ஆரோக்கியத்தை சீர்குலைத்துவிடுகிறது. நாம் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆக வேண்டும் என எண்ணி நாம் செய்யும் காரியங்கள் நமது செரிமான மண்டலத்தின் சீரான இயக்கத்தில் தலையிடுகிறது. 

எனவே உணவு சாப்பிட்ட பிறகு நாம் எதையெல்லாம் செய்யக்கூடாது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

*அவ்வாறு முதலில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது சாப்பிட்ட உடன் டீ, காபி அருந்தும் பழக்கத்தை கைவிடுவது தான். எந்த ஒரு உணவிற்கு பிறகும் உடனடியாக காபி, டீயை பருகாமல் ஒரு மணி நேரம் கழித்து எடுத்து கொள்வதே நல்லது என சுகாதார வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர். 

*ஒரு சில ஆண்களுக்கு உணவு சாப்பிட்ட உடனே புகைப்பிடிக்கும் பழக்கம் உண்டு. இது முற்றிலும் ஆபத்தானது. 

*அதே போன்று சாப்பிட்டவுடன் குளிப்பதை அறவே தவிர்க்க வேண்டும். குறைந்தது முப்பது நிமிடங்களாவது காத்திருந்த பிறகே குளிக்க வேண்டும். 

நாம் சாப்பிட்ட உணவானது ஜீரணம் ஆக அதிகப்படியான ஆற்றல் தேவைப்படுகிறது. சாப்பிட்டவுடனே குளிக்கும்போது நீரின் ஓட்டத்தை சமாளிக்க இரத்த ஓட்டம் எதிர் திசையில் திரும்புகிறது. இதன் காரணமாக செரிமானம் ஆகாமல் போகிறது. 

*சாப்பிட்டவுடன் தூங்குவது படுமோசமான ஒரு காரியமாகும். இதனை செய்வதற்கு பதிலாக நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் நேரத்தை செலவு செய்யலாம். தொலைக்காட்சி பார்த்தாலும் கூட தப்பு கிடையாது. ஆனால் சாப்பிட்ட உடனே தூங்குவது என்பது ஆபத்தானது. சாப்பிட்ட உடன் தூங்கினால் செரிமான சாறு எதிர் திசையில் பயணிக்க தொடங்கி செரிமானத்தில் சிக்கலை ஏற்படுத்திவிடும்.

Views: - 36

0

0