நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ருசியான தேங்காய் சிப்ஸ் ரெசிபி!!!

15 April 2021, 1:50 pm
Quick Share

ஸ்நாக்ஸ் என்றாலே அது தீங்கு விளைவிக்கும் என்று சொல்லி விட முடியாது. ஆரோக்கியமான, அதே சமயம் சத்தான சில சிற்றுண்டிகளும் இருக்கத்தான் செய்கின்றன‌. அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது தேங்காய் சிப்ஸ். இது ஒரு சுவையான சூப்பர்ஃபுட் ஆகும். மேலும் இது உங்களுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்குவதோடு, நோய்களைத் தடுக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியையும் வலிமையையும் வளர்க்கவும் உதவுகிறது.

இந்த அதிசய ஸ்நாக்ஸில்  எலும்பு மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு அவசியமான புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள், தாதுக்கள், மாங்கனீசு மற்றும் வைட்டமின் B ஆகியவை உள்ளன. தேங்காய் ட்ரைகிளிசரைட்களின் (எம்.சி.டி) வளமான மூலமாகவும் இருக்கிறது.  இது நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. இது பல தொற்றுநோய்களைத் தடுக்க உதவுகிறது. மாலை நேரத்தில் தேநீருடன் சாப்பிட இது ஒரு சிறந்த  சிற்றுண்டி ஆகும்.  

தேவையான பொருட்கள்:

4-6 கப் தேங்காய் கீற்றுகள் 

2 தேக்கரண்டி தேன்

1/2 தேக்கரண்டி இலவங்கப்பட்டை தூள்

1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்

1/4 கப் தண்ணீர்

2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய்

1/2 தேக்கரண்டி உப்பு

1/2 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள்

செய்முறை:

தேங்காயை உடைத்து அதனை உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்ய வெட்டுவது போல மெலிசாக வெட்டிக் கொள்ளவும். இந்த  தேங்காய் துண்டுகளை உலர வைக்கவும். 

* அடுப்பை 180 டிகிரி செல்சியஸில் முன்கூட்டியே சூடாக்கி, ஒரு பாத்திரத்தில் தேன், சூடான நீர், தேங்காய் எண்ணெய் மற்றும் தேங்காய் துண்டுகளை சேர்க்கவும். தேங்காய் துண்டுகளில் கலவை ஒட்டுமாறு நன்கு பூசவும்.

* ஒரு பாத்திரத்தில் உப்பு, மஞ்சள், இலவங்கப்பட்டை தூள், மற்றும் சிவப்பு மிளகாய் தூள் சேர்த்து, நன்கு கலந்து, தேங்காய் துண்டுகளில் பூசவும்.

* தேங்காய் துண்டுகளை ஒரு பேக்கிங் தட்டில் வைக்கவும். அதை முன்கூட்டியே சூடான அடுப்பில் வைக்கவும். இதனை சுமார் 10-15 நிமிடங்கள் பேக்கிங் செய்யுங்கள். இதற்கு  இரண்டு மூன்று நிமிடங்கள் ஆகும். 

* அடுப்பிலிருந்து தேங்காய் துண்டுகளை அகற்றி, ஆற வைக்கவும். அவை குளிர்ந்தவுடன் பரிமாறவும்.

Views: - 24

0

0