எடை இழப்புக்கு வெறும் வயிற்றில் குடிக்க வேண்டிய நச்சுநீக்க பானங்கள் பற்றிய தகவல்கள்

17 June 2021, 8:28 am
Detox Drinks To Have Have On An Empty Stomach For Weight Loss
Quick Share

Detox drinks என்று நச்சுநீக்க பானங்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கூடுதல் எடை தான் உங்களுக்கு பிரச்சினையாக இருந்தால் முதன்மையாக நச்சுநீக்க பானங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த நச்சுநீக்க குடிநீர் செரிமான செயல்முறையை எளிதாக்குகிறது மற்றும் ஆரோக்கியமான எடை இழப்புக்கு உதவுகிறது. நச்சுநீக்க பானங்கள் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றவும், உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு கணிசமான ஊக்கத்தை அளிக்கவும் உதவியாக இருக்கின்றன.

சரி இந்த பதிவில் வெறும் வயிற்றில் வெட்டிவேர் நீர் மற்றும் கொத்தமல்லி நீர் குடிப்பதால் உடலில் என்னென்ன நன்மைகள் நிகழும் என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.

வெட்டிவேர் நீர்

வெட்டிவேர் என்றாலே அதன் குளிரூட்டும் பண்புகளுக்கு தான் பெயர் பெற்றது. இந்த வெட்டிவேர் இப்போதெல்லாம் சாதாரணமாக கடைகளிலேயே கிடைக்கிறது. சிறிது வெட்டிவேரை தண்ணீரில் கொதிக்க வைத்து, அந்த தண்ணீரை வடிகட்டிய பின் ஒரு நாளைக்கு ஒரு முறை முக்கியமாக காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். 

இந்த நச்சுநீக்க பானம் எடை இழப்பு, நரம்பு தளர்வு மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்சினைகளுக்குச் சிகிச்சையளிக்க உதவியாக இருக்கும். இது தோல் மற்றும் கல்லீரலுக்கு மிகவும் நன்மை தரக்கூடிய ஒரு மூலிகை. வெட்டிவேர் கிருமிநாசினி பண்புகளையும் கொண்டுள்ளது. மேலும் சருமம் மற்றும் கூந்தளை ​​சுத்தப்படுத்தவும், செழிப்புடன் வளரச் செய்யவும் இந்த வெட்டிவேர் பயனுள்ளதாக இருக்கும்.

கொத்தமல்லி நீர் (அ) கொத்தமல்லி தேநீர்

கொத்தமல்லி விதைகளில் செரிமான நொதிகளைத் தூண்டுகிறது, அவை நமது செரிமான அமைப்பை மேம்படுத்தக்கூடியது. இது நார்ச்சத்துக்கு ஒரு நல்ல மூலமாகும். இந்த பானத்தில் தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள், பொட்டாசியம், இரும்பு, மெக்னீசியம், கால்சியம், ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின்கள் A, K, மற்றும் C ஆகியவை உள்ளன. 

ஒரு தேக்கரண்டி கொத்தமல்லி விதைகளை நீரிலிட்டு கொதிக்க வைத்து. நன்கு கொதிக்க விட வேண்டும். நன்கு கொத்தித்த பின் இறக்கி வைத்து நன்கு ஆறிய பின் அதை குடிக்கலாம். வேண்டுமென்றால் சுவைக்கு தேன் சேர்த்துக்கொள்ளலாம். இதை நீங்கள் அன்றாடம் குடிக்கும் காபி, டீ போன்ற பானங்களுக்கு பதிலாகவும் பயன்படுத்தலாம்.

Views: - 325

0

0