முதுகு வலி பிரச்சனைகள் நீங்க வேண்டுமா? இந்த ஆசனம் செய்து பாருங்கள்!

14 February 2020, 11:50 am
dhanurasanam updatenews360
Quick Share

தனுராசனம்   செய்வது ஆண்களை   காட்டிலும், பெண்களுக்கு  மிகுந்த நன்மை பயக்கின்றது.  இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால்    சுவாச உறுப்புகள் பலமடையும். அதுமட்டுமில்லாமல்   சுவாசம் சம்மந்தமாக இருக்கும் பிரச்சனைகள் நீங்கிவிடும்.

தனுர்  என்பது வில்  என்று பொருள்படும். உடலை  வில் போல வளைக்க செய்வதால்  தனுராசனம் என்று பெயர் பெற்றது.

செய்முறை :

  • ஒரு விரிப்பின்  மேல் குப்புர படுத்துக்க கொள்ள   வேண்டும். கால்கள் மற்றும் உடல் நேர்க்கோட்டில்   இருக்குமாறு படுக்க வேண்டும். 
  • பின்பு கால்களையும்  முன்பும், கைகளை பின்பும்   மெதுவாக உயர்த்தி வளைக்க வேண்டும். 
  • கால்களில்   கைகளை பற்றிக்கொள்ள   வேண்டும்.
  • வயிறு மற்றும்  தரையில் இருப்பதுபோல் இருக்க  வேண்டும், பின்பு மெதுவாக மூச்சை  இழுத்து விட வேண்டும்.
  • இதே  போல் இரண்டு, மூன்று முறை  செய்யலாம். 
dhanurasanam updatenews360

 ஆசனத்தின்  நன்மைகள்:

  • ஆஸ்துமா   மற்றும் மார்புச்சளி   போன்ற பிரச்சனைகள் நீங்கும்.
  • முதுகுவலி, கூன் முதுகு மற்றும்  இடுப்பு வலி போன்ற வலிகள் எளிதில்  குணமடைந்துவிடும்.
  • ஆஜீரண   கோளாறுகள், வயிற்று  வலி மற்றும் சிறுநீரக   பிரச்சனைகள் நீங்கிவிடும்.