ஓ மை கடவுளே… இந்த சிக்கு முடி பிரச்சினைக்கு தீர்வே இல்லையா? பெண்களே இது உங்களுக்காக!

20 July 2021, 8:55 am
DIY remedies to treat frizzy hair at home
Quick Share

மாறிக்கொண்டே இருக்கும் வானிலையாலும், வெயில், தூசி, மண் என வெளியே சென்றாலே பெண்கள் தங்கள் கூந்தலைப் பற்றி நிறையவே கவலைப்படுகின்றனர்.  அதுவும் கூந்தலை வாறும் போது சிக்கல் நிறைந்த முடியை சரி செய்வதற்குள் அப்பப்பா…! ஆனா இதற்கு என்னங்க காரணம்? அது தெரிந்தாலே நீங்க இந்த சிக்கலை ஈசியாக சரி பண்ணிடலாம். பொதுவாக முடி சிக்கல் விழுவது உச்சந்தலையில் இயற்கையான எண்ணெய் உற்பத்தி இல்லாததாலும் மற்றும் தலைமுடியில் நீரிழப்பு ஏற்படுவதால் தான் ஏற்படுகிறது. ஆனால் இயற்கையாகவே இதற்கு தீர்வு இருக்கும்போது நீங்க ஏன் கவலைப்படனும்?! இதற்கான தீர்வை தெரிஞ்சுக்கலாம் வாங்க.

வாழைப்பழம் மற்றும் தேன் மாஸ்க்

ஒரு பாத்திரத்தில் ஒரு வாழைப்பழத்தை பிசைந்து, அதில் ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் ஆலிவ் எண்ணெய் சேர்க்கவும். இந்த கலவையை உங்கள் தலைமுடியில் தடவி 25 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடுங்கள். அதன் பிறகு லேசாக ஷாம்பூவைப் பயன்படுத்தி கழுவி விடுங்கள், தேவைப்பட்டால் ஹேர் கண்டிஷனரையும் பயன்படுத்தலாம். சிறந்த முடிவுகளுக்கு வாரத்திற்கு ஒரு முறையாவது இந்த செயல்முறையை தொடர்ந்து பின்பற்றுங்கள்.

மயோனைஸ் மற்றும் முட்டை மாஸ்க்

ஒரு பாத்திரத்தில் மயோனைஸ் எடுத்து அதில் ஒரு முட்டை மற்றும் இரண்டு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் சேர்க்கவும். இதை நன்கு கலந்து பேஸ்ட் ஆக தலைமுடி மற்றும் உச்சந்தலையில் தடவவும். உங்கள் தலைமுடியை ஷவர் கேப் போட்டு அரை மணி நேரம் விட்டு விடுங்கள். அதன் பிறகு லேசான ஷாம்பு மற்றும் கண்டிஷனரைப் பயன்படுத்தி உங்கள் தலைமுடியைக் கழுவவும். இந்த செயல்முறையை மாதத்திற்கு இரண்டு முறையாவது செய்யுங்கள். நல்ல பலன் கிடைக்கும்.

ஆப்பிள் சைடர் வினிகர்

நான்கு தேக்கரண்டி ஆப்பிள் சைடர் வினிகரை இரண்டு கப் தண்ணீருடன் கலந்துக் கொள்ளுங்கள். உங்கள் தலைமுடியை இந்த தண்ணீரைக் கொண்டு கழுவுங்கள். ஆனால், உங்கள் தலைமுடியில் இந்த கலவையை ஊற்றி 30 விநாடிகள் விட்டுவிட்டு, அதன் பிறகு குளிர்ந்த நீரில் தலைமுடியை அலச வேண்டும்.

பாதாம் எண்ணெய்

சிக்கலான கூந்தலுக்கு சிகிச்சையளிக்க பாதாம் எண்ணெய் ஏற்ற ஒரு இயற்கை தீர்வு. பாதாம் எண்ணெயுடன் உங்கள் தலைமுடி மற்றும் உச்சந்தலையில் மசாஜ் செய்து ஒரு இரவு முழுவதும் அப்படியே விட்டு விடுங்கள். லேசான ஷாம்பு மற்றும் கண்டிஷனரைப் பயன்படுத்தி காலையில் தலைக்கு குளித்துக் கொள்ளுங்கள். சல்பேட் இல்லாத ஷாம்பூவைப் பயன்படுத்த்த முயற்சி செய்யுங்கள்.

பட்டர் புரூட் மாஸ்க்

ஒரு வெண்ணெய் பழத்தை தயிரில் கலந்து மென்மையான மற்றும் கிரீம் போன்ற ஒரு பேஸ்ட் ஆக செய்துகொள்ளுங்கள். உங்கள் தலைமுடியில் இதை தடவி சுமார் 40 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடுங்கள். லேசான ஷாம்பூ போட்டு நன்கு கழுவிவிடுங்கள். உங்கள் முடி சிக்கல் பிரச்சினையே இல்லாமல் போஷாக்காக இருக்கும். 

Views: - 166

0

0

Leave a Reply