COVID-19 தொற்றை கண்டறிய அனைத்து நோயாளிகளுக்கும் CT ஸ்கேன் தேவையா? இது பாதுகாப்பனதா? முக்கியமான தகவல்கள் இதோ

3 June 2021, 9:21 am
Do All Patients Need it Is it Safe Here's All You Need to Know
Quick Share

COVID-19 தொற்று எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே போவதால், ஒருபுறம் மருத்துவமனைகளில் படுக்கை கிடைக்காமல் போகிறது. அதே சமயம் கதிரியக்கவியல் ஆய்வகங்களில் CT ஸ்கேன் மற்றும் X-Ray எடுக்க கூட்டம் நிரம்பி வழிகிறது. 

மருத்துவர்களின் ஆலோசனையுடனோ அல்லது ஆலோசனை இல்லாமலோ CT ஸ்கேன் செய்வதற்கென கதிரியக்கவியல் ஆய்வகங்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. 

ஆனால் அது தேவையா இல்லையா? இது சிகிச்சையைத் உதவுமா? எத்தனை நாட்கள் இடைவெளியில் CT Scan எடுக்கலாம்? இதனால் உடலுக்கு பாதிப்பு ஏற்படுமா? என பல கேள்விகள் மனதில் நிரம்பிய நிலையிலேயே பலரும் கால் கடுக்க எல்லோரும் ஆய்வகங்களில் காத்துக்கிடக்கின்றனர். அதை பற்றி இந்த பதிவில்  தெளிவாக தெரிந்துக்கொள்வோம்.

தொற்று எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருப்பதால் RTPCR சோதனையின் மூலம் முடிவுகள் வர காத்திருக்க வேண்டி இருக்கிறது. இதுபோன்ற சூழ்நிலையில் நோயாளியின் நிலைமை மோசமடைந்துவிட்டால் என்ன செய்வது என்பதால் CT ஸ்கேன் அல்லது X-Ray எடுத்து பார்த்து நோய்த்தொற்று இருக்கிறதா என்பதை அறிந்துக்கொள்ள வேண்டி இருக்கிறது. 

அதுமட்டுமில்லாமல் RTPCR நுட்பத்தின் மூலம் வைரஸைக் கண்டறிய பயன்படுத்தப்படும் Naso-pharyngeal swab சோதனை சில சமயங்களில் வைரஸின் புதிய பரிமாணம் இருந்தால் தவறாக Negative என்று சோதனை முடிவுகளை வழங்கிவிடக்கூடும். 

இதனால் தொற்று இருக்கும் பல நோயாளிகள் வெளியில் நடமாட செய்வதால் தொற்று பரவும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. CT ஸ்கேன் பரிசோதனை நிலையங்களில் கூட்டம் அதிகரிக்க இதுவும் ஒரு காரணம் என்று சொல்லலாம். 

ஆனால் CT ஸ்கேன் சோதனையின் போது நோயாளிகள் அதிக அளவு தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சுக்கு வெளிப்படுத்தப்படுவதோடு மட்டுமல்லாமல் இது அதிகம் செலவாக கூடிய ஒரு சோதனை முறையாகவும் உள்ளது. இந்த CT ஸ்கேன் தொடர்பாக உங்களுக்கு இருக்கும் சில கேள்விகளுக்கான பதில்களை இப்போது பார்க்கலாம்.

CT ஸ்கேன் என்றால் என்ன?

Computed Tomography என்பது தான்  CT Scan என்று சொல்லப்படுகிறது. HRCT என்றால் High Resolution CT (மிகவும் துல்லியமான மற்றும் அதிக கதிர்வீச்சு வெளிப்பாடு). இந்த HRCT தான் கோவிட் 19 தொற்றைக் கண்டறிவதற்கு அறிவுறுத்தப்படுகிறது. RTPCR சோதனை கூட வைரஸை கண்டறிய முடியவில்லை என்றாலும், HRCT சோதனை முறை நோய்த்தொற்றின் இருப்பு மற்றும் தீவிரத்தன்மை பற்றி தெளிவாகக் கண்டறிந்து கூறிவிடும்.

அனைத்து கோவிட் நோயாளிகளுக்கும் CT செஸ்ட் சோதனை தேவையா?

இல்லை. மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் மட்டுமே சோதனை செய்தால் போதும்.

எந்தெந்த நோயாளிகளுக்கு CT scan தேவைப்படும்?

ரத்தத்தின்  ஆக்சிஜன் அளவு என்று சொல்லக்கூடிய SpO2 94% க்கும் குறைவாக இருந்தாலோ, சுவாச வீதம் நிமிடத்திற்கு 24 க்கும் குறைவாக இருந்தாலோ, தொடர்ச்சியான காய்ச்சல் மற்றும் / அல்லது 7 நாட்களுக்கு மேல் இருமல், மூச்சுத் திணறல் போன்ற கடுமையான அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகளுக்கு CT ஸ்கேன் சோதனை மருத்துவரின் பரிந்துரையின் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.

CT scan ஐ விட X-Ray பாதுகாப்பானதா?

ஆம். CT ஸ்கேன் அதிக கதிர்வீச்சு வெளிப்பாட்டைக் கொண்டுள்ளது, இது மற்ற நோய்களுக்கு வழிவகுக்கும் அபாயம் உண்டு. பல்வேறு வகையான CT ஸ்கேன் முறைகள் உண்டு. அவற்றில் கொரோனா தொற்றைக் கண்டறிய பயன்படுத்தப்படும் HRCT சோதனை முறை X Ray சோதனை முறையை 50 முதல் 100 மடங்கு அதிக கதிர்வீச்சை உடலினுள் செலுத்தக்கூடும்.

இவ்வளவு ஆபத்தான CT ஸ்கேன் சோதனைக்கான அவசியம் ஏன்?

X-Ray மூலம் கிடைக்கும் நுரையீரலின் 2D தோற்றம், நோய்த்தொற்றின் தீவிரத்தன்மை பற்றி ஒரு புரிதலைத் தருகிறது. இது லேசானது மற்றும் மருத்துவ அறிகுறிகளுடன் தொடர்புடையது என்றால் CT ஸ்கேன் தேவைப்படாது. நோய்த்தொற்றின் வளர்ச்சியை மதிப்பிடுவதற்கு தொடர்ச்சியான X-Ray சோதனை எடுக்க வேண்டி இருக்கும்.

X-Ray மூலம் மிதமான மற்றும் கடுமையான தொற்றுநோயைக் கண்டறிய முடியும் வேளையில், நோய்த்தொற்றின் சரியான தீவிரத்தைக் கண்டறிய நுரையீரலின் முழுமையான 3D படத்தைப் பார்க்க CT scan சோதனை முறை அறிவுறுத்தப்படுகிறது.

CT scan குறித்து மேலும் உங்களுக்கு இருக்கும் கேள்விகளுக்கான விடைகளை அறிய கீழுள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்: 

Views: - 197

0

0