கொழு கொழுவென ஆக வேண்டும் என்ற ஆசையில் இந்த தவறை எல்லாம் செய்து விடாதீர்கள்!!!

Author: Hemalatha Ramkumar
24 November 2021, 12:59 pm
Quick Share

நீங்கள் எடை அதிகரிக்க முயற்சிக்கிறீர்களா? அந்த நோக்கத்தில், நீங்கள் ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையைப் பின்பற்றுகிறீர்களா? உங்கள் பதில் ஆம் என்றாலும் உங்கள் எடை இன்னும் அதிகரிக்கவில்லை என்றால், நீங்கள் தவறான பாதையில் இருக்கக்கூடும் என்பதற்கான அறிகுறியாகும். உடல் எடையை குறைப்பது என்பது பெரும்பாலான மக்களுக்கு ஒரு சவாலான பணியாக இருந்தாலும், எடை அதிகரிப்பது என்பது சமமான கடினமான விஷயம் ஆகும்.
இருப்பினும், இது சாத்தியமற்றது அல்ல! உங்களை சரியான பாதையில் கொண்டு செல்ல நீங்கள் இந்த தவறுகளை தவிர்க்க வேண்டும்.

இப்போது வரை, போதுமான அளவு சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்க உதவும் என்று நீங்கள் நினைத்திருக்க வேண்டும். ஆனால் அது அவ்வாறு இல்லை. உடல் எடையை அதிகரிக்க, நீங்கள் பல விஷயங்களையும் கவனிக்க வேண்டும்.
நீங்கள் உடல் எடை அதிகரிக்க முயற்சிக்கும் போது செய்யும் சில பொதுவான தவறுகள் இங்கே உள்ளன.

தொழில்முறை பாடிபில்டர்களை பின்பற்றுவது:
உடல் எடையை அதிகரிக்க விரும்பும் பலர், தொழில்முறை பாடி பில்டர்களுக்கு இணையாக முயற்சிக்கும் தவறை செய்கிறார்கள். அவர்களின் பழக்கவழக்கங்களால் ஈர்க்கப்பட்டு அவர்களை தங்கள் ரோல்மாடலாக கருதுகிறார்கள். ஆனால் பெரும்பாலான பாடிபில்டர்கள் சப்ளிமெண்ட்ஸை மொத்தமாக எடுத்துக்கொள்வார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? எனவே, புத்திசாலித்தனமாக இருங்கள் மற்றும் எடை அதிகரிக்கும் செயல்பாட்டின் போது யாரையும் அல்லது எந்த போக்கையும் கண்மூடித்தனமாக பின்பற்ற வேண்டாம்.

எடை அதிகரிப்பு ஒரே இரவில் நடக்கும் என்று நினைக்க வேண்டாம்:
எடை அதிகரிப்பு ஒரே இரவில் நடக்காது. ஆம், உடல் எடையை அதிகரிக்க நீங்கள் நிறைய முயற்சி செய்ய வேண்டியிருக்கும். மாற்றம் படிப்படியாக நடக்கும், அதன் பிறகு தான் நீங்கள் முடிவுகளைப் பார்ப்பீர்கள். நீங்கள் சீராக இருக்க வேண்டும் மற்றும் உடற்பயிற்சி மற்றும் உணவு முறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். உடனடி முடிவுகளை எதிர்பார்ப்பதை நிறுத்துங்கள். பொறுமையாக இருங்கள், நீங்கள் நிச்சயமாக உங்கள் இலக்கை அடைய முடியும். ஆனால், எதற்காகவும் உங்கள் முயற்சிகளை கைவிடாதீர்கள்.

உணவைத் தவிர்ப்பது:
நீங்கள் உணவைத் தவிர்க்கிறீர்களா? அப்படி என்றால், நீங்கள் எல்லாவற்றையும் தவறாக செய்கிறீர்கள். எடை அதிகரிக்கும் போது ஒருவர் செய்யும் பொதுவான தவறு இது. இது வளர்சிதை மாற்றத்தை பாதிக்கலாம் மற்றும் நீங்கள் விரும்பியபடி உடல் எடையை அதிகரிக்க முடியாது. மேலும், ஒரே நேரத்தில் கனமான உணவை உட்கொண்டு, மீதமுள்ள உணவைத் தவிர்ப்பது உங்கள் நல்வாழ்வில் அழிவை ஏற்படுத்தும். எனவே, சான்றளிக்கப்பட்ட பயிற்சியாளரின் வழிமுறைகளைப் பின்பற்றவும். ஆன்லைனில் கிடைக்கும் தகவல்களை நம்ப வேண்டாம்.

சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்வது:
ஃபிட்னஸ் பிரியர்கள் கொடுக்கும் அறிவுரைகளை பலர் கண்மூடித்தனமாக பின்பற்றுகிறார்கள். அவர்கள் விரைவான எடை அதிகரிப்பு தொடர்பான வீடியோக்களை நம்பியிருக்கிறார்கள். மேலும் செயற்கையான சப்ளிமெண்ட்ஸைச் சார்ந்து இருக்கிறார்கள். சப்ளிமெண்ட்ஸ் செயற்கையானவை, ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பவை மற்றும் மிகவும் விலை உயர்ந்தவை என்பதால், இயற்கை உணவு மூலங்களிலிருந்து அதே அளவு புரதம் மற்றும் கலோரிகளை உட்கொள்ள முயற்சிக்கவும்.

உடற்பயிற்சியைத் தவிர்த்தல்:
உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக உடற்பயிற்சியை கைவிடக்கூடாது. ஒரு உட்கார்ந்த வாழ்க்கை முறை உடல் பருமனை மட்டுமல்ல, உயர் இரத்த அழுத்தம், சுவாசப் பிரச்சினைகள் அல்லது இதய பிரச்சினைகள் போன்ற பிற பிரச்சினைகளையும் கூட அழைக்கும். ஒரு நிபுணரின் உதவியுடன் உங்கள் வொர்க்அவுட்டை செய்யுங்கள்.

எனவே பெண்களே, இந்த தவறுகளை தவிர்த்து, சரியான முறையில் உடல் எடையை அதிகரிக்கவும்!

Views: - 138

0

0

Leave a Reply