ஒரு பைசா செலவில்லாமல், கஷ்டப்படாமல் எளிமையான முறையில் உடல் எடையை குறைக்க ஆசையா…இத படிங்க!!!

17 October 2020, 11:04 am
Quick Share

உடல் எடையை குறைக்க பல நபர்கள் பாடுபட்டு வருகின்றனர் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை தான். ஆனால் ஒரு சிலர் மட்டுமே இந்த எடை குறைப்பு பயணத்தில் வெற்றி காண்கிறார்கள். உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற ஆசையில் வாரி வாரி பணத்தை செலவழித்தும் வருகின்றனர் ஒரு சிலர். இதற்கெல்லாம் இனி அவசியம் இருக்காது. ஏன்னு யோசிக்கிறீங்களா???

ஆம்… ஒரு பைசா செலவில்லாமல், கஷ்டப்படாமல் எளிமையான முறையில் உடல் எடையை குறைக்க முடியும் என்று சொன்னால் இதை விட ஒரு ஹேப்பி நியூஸ் உங்களுக்கு இருக்காது தான். உங்கள் வீட்டிலோ அல்லது வீட்டின் அருகிலோ படிகட்டு இருந்தால் மட்டும் போதும். தினமும் பதினைந்து நிமிடங்கள் செலவழித்து இந்த படிகட்டுகளில் ஏறி இறங்குங்கள்.

இந்த பயிற்சியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது கவனிக்க வேண்டிய சில விஷயங்களை பற்றி இப்போது பார்க்கலாம். உங்களுக்கு தெரியவில்லை என்றால் படிகட்டு ஏறுவதும் ஒரு வித உடற்பயிற்சி தான். இந்த உடற்பயிற்சியை காலை மற்றும் மாலை ஆகிய இரு வேலையிலும் உங்களுக்கு பிடித்தமான ஆடையை உடுத்தி பதினைந்து நிமிடங்கள் செய்ய வேண்டும். 

இதில் உங்களுக்கு பொறுமை என்பது மிக மிக முக்கியம். ஒரு சில நாட்களுக்கு மட்டும் பயிற்சியை செய்து விட்டு உடல் எடை குறையவில்லையே என்று குறை கூற கூடாது. குறைந்தது ஒரு மாதமாவது செய்தால் தான் வித்தியாசத்தை காணலாம். இன்னும் ஒரு சிலருக்கு மூன்று மாதங்கள் வரை கூட எடுக்கலாம். 

நீங்கள் செய்ய வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் படிகட்டு ஏறும்போது நடு நடுவே சிறிய  உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். உதாரணமாக ஸ்டெப் அப்கல், புஷ்- அப்கள் போன்றவை. இரண்டு நிமிடங்கள் படிகட்டுகளில் ஏறி இறங்கிய பின் ஒரு நிமிடம் ஓய்வு எடுத்து கொள்ளுங்கள். 

அடுத்த இரண்டு நிமிடங்களுக்கு பொறுமையாக ஏறி இறங்க வேண்டும். இதையே பதினைந்து நிமிடங்களுக்கு செய்யுங்கள். இந்த பயிற்சியை நாம் மாலை நேரத்தில் செய்யும் போது நமக்கு ஒரு வித புத்துணர்ச்சி கிடைக்கும். இதை எண்ணி பார்த்து ரசித்து கொண்டே நாம் பயிற்சியை மேற்கொள்ளலாம்.

Views: - 20

0

0