மீன் சாப்பிட்ட பிறகு பால் குடிக்க வேண்டாம் என்று உங்கள் பெற்றோர் உங்களுக்க அறிவுறுத்தியிருக்கலாம். மீன் சாப்பிட்ட பிறகு பால் குடிக்கும் போது, தோல் மீது வெள்ளைத் திட்டுகளை ஏற்படுத்தும் (விட்டிலிகோ) என்ற பொதுவான கருத்து உள்ளது. இது குறித்து
ஆராய்வோம்.
மீனுடன் பால் குடிப்பதால் விட்டிலிகோ வருமா?
மீன் சாப்பிட்ட பிறகு பால் அல்லது பால் பொருட்களை உட்கொள்வது சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று ஒரு பழைய கட்டுக் கதை உள்ளது.
மற்றொரு கோட்பாட்டின் படி, மீன் மற்றும் பால் பொருட்கள் அதிக புரத உணவுகள் மற்றும் அவற்றை ஜீரணிக்க பல்வேறு வகையான நொதிகள் தேவைப்படுகின்றன.
இந்த இரண்டு உணவுகளையும் ஒன்றாகச் சாப்பிடுவதன் விளைவாக, அவற்றை ஜீரணிக்க நம் உடல் அதிக அளவு ஆற்றலை வெளியிடுகிறது. இது வாயு, வீக்கம் மற்றும் பிற செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
நிபுணர்களின் கூற்றுப்படி, மீன்களுக்குப் பிறகு பால் குடிப்பது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. இவை இரண்டும் தவிர்க்கப்பட வேண்டும் என்று கூறுவதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
மீன் மற்றும் பால் பொருட்கள் இணைந்தால் தீங்கு விளைவிக்கும் என்று எந்த விஞ்ஞானமும் கூறவில்லை. தயிர் பல்வேறு வகையான மீன் உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. இது ஒன்றாக தீங்கு விளைவிக்கும் என்ற கோட்பாட்டை மறுக்கிறது.
ஆகவே, பால் மற்றும் மீன் விட்டிலிகோவை ஏற்படுத்தாது.
அடிப்படையில், விட்டிலிகோ என்பது பொதுவாக காலப்போக்கில் பெரிதாக வளரும் தோலில் நிறமாற்றத்லை ஏற்படுத்தும் ஒரு நோயாகும். இது தோலையும், முடி மற்றும் வாயின் உட்புறத்தையும் கூட பாதிக்கலாம்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
வரிசையாக லைக் போட்ட விராட் கோலி பாலிவுட் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருபவர் அவ்னீட் கவுர். இவர் பல ஹிந்தி…
பிரபல இயக்குநர் சொன்ன கதைப்படி படம் முழுவதும் பாவாடை கட்டிக்கிட்டு வரவேண்டும் என்பதால் படத்தில் இருந்து விலகியுள்ளார் சூப்பர் ஸ்டார்.…
தேர்தலை நோக்கி விஜய் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை நோக்கி விஜய் நடைபோட்டுக்கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் இரண்டு…
விஜய் டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி பெரிய திரையில் வாய்ப்பு பெற்றவர் நடிகர் யோகி பாபு. டைமிங் காமெடி மூலம்…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பாஜக வடக்கு மண்டல் தலைவராக பாலகிருஷ்ணன் என்பவரது பதவி ஏற்பு விழா உசிலம்பட்டியில் உள்ள தனியார்…
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
This website uses cookies.