மாம்பழம் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா???

Author: Udhayakumar Raman
17 March 2021, 10:37 pm
Quick Share

பழங்கள் மிகவும் சத்தானவை என்பதால் எந்த ஒரு பயமும் இல்லாமல் அதனை நாம்  அனுபவிக்கலாம். மேலும் ஆரோக்கியமான வழியில் பசியைக் குறைக்க இது ஒரு சிறந்த வழியாகும். ஆனால் பலர் எடை அதிகரிக்கும் என்ற அச்சத்தில் கோடைகால பழங்களிலிருந்து, குறிப்பாக மாம்பழங்களை சாப்பிட மறுக்கிறார்கள்.  ஆனால் அவற்றை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டுமா? மாம்பழம் சாப்பிட்டால் உண்மையாகவே உடல் எடை அதிகரிக்குமா…? இந்த தகவல்களைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம். 

மாம்பழங்களில் வைட்டமின் A, வைட்டமின் C, செம்பு மற்றும் ஃபோலேட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது ஒரு சதவீத கொழுப்பைக் கொண்டுள்ளது. மேலும் இதில் புரதம் மற்றும் நார்ச்சத்து ஆகியவை அடங்கும். இது செரிமானத்தை திறம்பட செயல்பட வைக்கிறது. மாம்பழத்தில் உள்ள டயட் ஃபைபர் இதய நோய், டைப் 2 நீரிழிவு நோயைக் குறைக்க உதவுகிறது.

ஆனால் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவது உங்கள் கொழுப்பை அதிகரிக்குமா…?

நீங்கள் மாம்பழ மில்க் ஷேக்குகள், பழச்சாறுகள், ஐஸ்கிரீம், மாம்பழ கிரீம், மாம்பழ துண்டுகள் போன்ற வடிவங்களில் சாப்பிட்டால் மட்டுமே அது உங்களை கொழுப்பாக மாற்றும்.

* மாம்பழத்தை ஒரு முழுமையான பழமாக சிற்றுண்டியாக  சாப்பிடுகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் பெரிய உணவோடு அதனை சாப்பிட வேண்டாம்.

* ஒரு நாளைக்கு ஒரு மாம்பழம் என்ற வகையில்  உங்களை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்.

* இவ்வாறு செய்தால் இந்த ஜூசி பழத்தை, எந்த பயமும் இல்லாமல்  தினமும் அனுபவிக்கலாம்.

Views: - 94

0

0