உடல் எடை முதல் செரிமானம் வரை அனைத்திலும் அற்புதங்கள் செய்யும் தானியம்!!!

Author: Hemalatha Ramkumar
19 October 2021, 9:42 am
Quick Share

ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்கும் போது நமது உணவுப் பழக்கங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. இதனால்தான் வல்லுநர்கள் அடிக்கடி ஆரோக்கியமான உணவு வகைகள் மற்றும் உணவுகளின் சேர்க்கைகளைச் சேர்க்க சில உணவு மாற்றங்களைச் செய்ய பரிந்துரைக்கின்றனர். இது உடலின் ஊட்டச்சத்து தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவுவது மட்டுமல்லாமல், ஒரு நாள் முழுவதும் திருப்தியாகவும் ஆற்றலுடனும் உணரவும் உதவுகிறது. எனவே, நீங்கள் சில ஆரோக்கியமான இடமாற்றங்களை செய்ய விரும்பினால், சோளத்தை நம்பலாம்.

இது ஆயுர்வேத சமையலில் பரவலாகப் பயன்படுத்தப்படும் அற்புதமான பசையம் இல்லாத தானியமாகும். கோடை காலத்தில் அதன் குளிரூட்டல் மற்றும் எளிதில் ஜீரணிக்கக்கூடிய பண்புகள் காரணமாக அது பயன்படுத்தப்படுகிறது. பல்வேறு வழிகளில் இதனை பயன்படுத்த முடியும்.

நாம் ஏன் சோளத்தை சாப்பிட வேண்டும்?
சில நேரங்களில் ஆயுர்வேத மருத்துவர்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு அரிசிக்கு பதிலாக சோளத்தை சமைத்து சாப்பிட சொல்லுவார்கள். ஏனெனில் இது எடை கட்டுப்பாட்டிற்கும் கெட்ட கொழுப்பைக் குறைப்பதற்கும் உதவுகிறது. இதிலுள்ள அதிகரித்த நார்ச்சத்து செரிமான ஆரோக்கியத்திற்கும் சிறந்தது.

நீரிழிவு நோயாளிகளுக்கு இது எவ்வாறு உதவுகிறது?
ஒரு ஆரோக்கியமான தானியமாக, சோளம் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. அதாவது இது சர்க்கரை அதிகரிப்பை ஏற்படுத்தாது மற்றும் இன்சுலின் அளவை பராமரிக்க உதவுகிறது. இது ஹார்மோன் மற்றும் இதய ஆரோக்கியத்தை சீராக்க உதவுகிறது. இது ஒருவரை முழுதாக உணர உதவுகிறது. சோளத்தில் புரதம், உணவு நார்ச்சத்து, கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், வைட்டமின் B மற்றும் C ஆகியவை அடங்கும்.

நாம் எப்படி சோளத்தை பயன்படுத்தலாம்?
நீங்கள் சோளத்தை சப்பாத்தி, உப்மா, புலாவ் போன்றவையாக செய்து சாப்பிடலாம்.

சோளத்தில் சப்பாத்தி செய்வது எப்படி?
*சப்பாத்தி செய்ய சோள மாவை பயன்படுத்தும் முன் அதனை சிறிது நேரம் ஆவியில் வேக வைக்கவும்.
*பின்னர் மாவை 15 நிமிடங்கள் பிசையவும். இது மாவு உடைந்து போவதைத் தவிர்க்க உதவுகிறது.
*தண்ணீர் தெளித்த பிறகு 10 விநாடிகள் காத்திருந்து பின் மாவை மீண்டும் பிசையவும். இது ரொட்டி தவாவில் ஒட்டாமல் இருப்பதை உறுதி செய்கிறது.
*மாவை உருண்டை பிடிக்கவும்.
*இப்போது மாவு மென்மையாக இருக்க ஈரமான துணியால் மூடி வைக்கவும்.
*சப்பாத்தியை தோசைக்கல்லில் போட்டு எடுக்கவும்.

Views: - 314

0

0