உங்களுக்கு இனி செரிமான கோளாறு ஏற்பட கூடாதுன்னா உணவிற்கு முன்பு இதனை சாப்பிடுங்கள்!!!

2 September 2020, 10:20 am
Quick Share

ஊரடங்கை காரணமாக பலரும் தற்போது வீட்டிலிருந்து வேலை பார்த்து வருவதால் பலருக்கும் பல விதமான சிக்கல்கள் உண்டாகிறது. அதில் ஒன்று தான் செரிமான கோளாறு. நீங்கள் அவ்வப்போது  செரிமான சிக்கல்களுடன் போராடிக்கொண்டிருந்தால், ஆயுர்வேதத்தின் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு மருந்து உங்களுக்கு உதவக்கூடும். அந்த மருந்தை எப்படி செய்வது என்று யோசிக்கிறீர்களா? உங்களால் என்ன ஜீரணிக்க முடியுமோ அது தான் நீங்கள். உங்கள் உணவை நன்றாக ஜீரணிக்க உதவும் வகையில் அனைவருக்கும் பிடித்த நுஸ்கா எப்படி செய்வது என இந்த பதிவில் பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்

ஒரு துண்டு – ஃபிரஷ் இஞ்சி அல்லது உலர்ந்த இஞ்சி

ஒரு சிட்டிகை – கல் உப்பு

எலுமிச்சை சாறு (விரும்பினால்)

இதை எவ்வாறு உட்கொள்வது?

செரிமான சாறுகள் அதிகமாகப் பாய்வதற்கு  உணவிற்கு முன்பாக ஃபிரஷான இஞ்சியை கல்  உப்பு மற்றும் எலுமிச்சை சாறுடன் மென்று சாப்பிடுங்கள். 

இது எவ்வாறு உதவுகிறது?

ஆயுர்வேதத்தின்படி, குமட்டல் மற்றும் வாந்தியைக் கட்டுப்படுத்த இஞ்சி பயன்படுகிறது. ஏனெனில் அதன் பசி, செரிமான மற்றும் சுவை அதிகரிக்கும் பண்புகள் காரணமாக இதனை செய்ய முடிகின்றது. இந்த பண்புகளினால்தான் கர்ப்ப காலத்தில் அனுபவிக்கும் காலை வியாதியின் போது கர்ப்பிணி பெண்களுக்கு  இஞ்சி வழங்கப்படுகிறது.

கல் உப்பு வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது அல்லது உடலில் உள்ள வேதியியல் எதிர்வினை உடலின் எலக்ட்ரோலைட்டுகளை நிரப்பவும், pH சமநிலையை பராமரிக்கவும் உதவுகிறது.  இது இறுதியில் உடலின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது.

ஆயுர்வேதத்தின்படி, திசு மட்டத்தில் செரிமானம் பலவீனமடைவதால் அதிகப்படியான நச்சு எச்சங்கள் அல்லது கழிவுகள் உருவாகின்றன. இது கெட்ட கொழுப்பைக் குவிப்பதற்கும் இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவதற்கும் வழிவகுக்கிறது. ஆண்டிஸ்பாஸ்மோடிக் (தசை இயக்கத்தை மென்மையாக்க உதவுகிறது) பண்புகளைக் கொண்ட இஞ்சி, செரிமான நெருப்பை மேம்படுத்துகிறது மற்றும் அதிகப்படியான கழிவுகளை குறைக்கிறது.  அதே நேரத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் இரத்த நாளங்களின் அடைப்பை அழிக்கிறது.

குறிப்பு:

உடலில் அதிக வெப்பம் உள்ளவர்கள் இந்த மருந்தை சிறிதளவு மட்டும் முதலில் எடுத்து பார்க்க வேண்டும்.  உடல் அதற்கு எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பதைக் கவனித்து பின்னர் அதனை எடுக்கலாம்.

Views: - 0

0

0