கோழிக்கறி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன? உண்மையில் சிக்கன் உடலுக்கு நன்மைதானா?

14 February 2020, 6:42 pm
Eating chicken helps lose weight; 5 other benefits you had no idea about
Quick Share

அசைவ பிரியர்களிடம் கேட்டு பாருங்கள், அவர்கள் சிக்கன் என்றால் எவ்வளவு உயிராக இருக்கிறார் என்பதை அவர்கள் உங்களுக்கு சொல்வார்கள். உலகில் மிகவும் பொதுவான தாகவும் எளிதானதாகவும் கிடைப்பதாலோ என்னவோ தெரியவில்லை, சிக்கன் என்றாலே மிகவும் பிரபலமானதாக உள்ளது.

ஆனால் சிக்கல் இவ்வளவு பிரபலமாக காரணம் அதன் சுவை மட்டுமல்ல, அதன் பல ஆரோக்கிய நன்மைகளும் தான். உண்மையில் சிக்கன்  சாப்பிடுவது நன்மைதான். ஆனால், பலரும் சிக்கன் சாப்பிடுவது நல்லதில்லை என்று சொல்கிறார்களே! உண்மைதான் என்ன? 

ஆமாம், கோழிகள், நெரிசலான முறையிலும், அடைக்கப்படும் மற்றும் சுகாதாரமற்ற பண்ணைகளில் வளர்க்கப்படும்போது, அவை ​​ஆரோக்கியமற்றதாக மாறுவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால் அதுவே திறந்தவெளி பண்ணைகளிலும், கிராமப்புறங்களிலும் வளர்க்கப்படும் நாட்டுக்கோழி போன்றவை எண்ணற்ற நன்மைகளை கொண்டுள்ளன. அப்படி என்ன நண்மைகளை கொண்டுள்ளது என்பதை தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

1. புரதச்சத்து

கோழியில் மிக அதிகமான புரதச்சத்துக்கள் உள்ளடக்கம் உள்ளது, இது நமது தசைகளுக்கு ஆரோக்கியத்தை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. வலிமையாக இருக்க விரும்புவோர் கண்டிப்பாக ஆரோக்கியமான கோழிக்கறி சாப்பிடுவது அவசியம்.

2. எடை இழப்பு

ஆரோக்கியமான உணவுக்கான பட்டியலில் கண்டிப்பாக கோழிக்கறி எப்போதும் சேர்க்கப்படுவதற்கான காரணம், இது அடிப்படையில் ஒரு மெலிவான இறைச்சியாகும், அதாவது அதில் அதிக கொழுப்பு இல்லை. எனவே, தவறாமல் கோழி சாப்பிடுவது ஆரோக்கியமான வழியில் உடல் எடையை குறைக்க உதவும்.

3. ஆரோக்கியமான எலும்புகள்

புரதத்தைத் தவிர, கோழிக்கறியில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. இந்த இரண்டு தாதுக்களும் உங்கள் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன. கோழிக்கறி தவறாமல் சாப்பிடுவதால் கீல்வாதம் ஏற்படும் அபாயமும் குறைகிறது.

4. அழுத்த நிவாரணி

கோழிக்கறி டிரிப்டோபேன் மற்றும் வைட்டமின் பி 5 கொண்டுள்ளது. கோழிக்கறியில் மெக்னீசியம் சத்தும் நிறைந்துள்ளது, இது பிஎம்எஸ் அறிகுறிகளை நீக்குகிறது. எனவே, கோழிக்கறி சாப்பிடுவது உண்மையில் மன அழுத்தம் இல்லாமல் வாழ உதவும்.

5. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

உங்களுக்கு குளிர் அல்லது காய்ச்சல் இருந்தாலும், உங்கள் மீட்பு உணவின் ஒரு பகுதியாக சிக்கன் சூப்பை மருத்துவர்கள் ஏன் பரிந்துரைக்கிறார்கள் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? ஏனெனில் கோழிக்கறி உடலில் உள்ள நோயெதிர்ப்பு உயிரணுக்களை அதிகரிக்க உதவுகிறது, அதே நேரத்தில் சூப்பில் இருந்துவரும் நீராவி நாசி பாதையை தெளிவாக்குகிறது. கோழிக்கறி சூப் சாப்பிடுவது பெரும்பாலான நோய்த்தொற்றுகள் மற்றும் சளி ஆகியவற்றிலிருந்து மீள சிறந்த வழியாகும்.

Leave a Reply