பச்சை பீன்ஸை சமைக்காமல் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா…. கெட்டதா????

29 June 2020, 1:42 pm
Quick Share

பச்சை பீன்ஸ் மெல்லிய, கடித்து உண்ணக் கூடிய ஒரு காய்கறி வகை ஆகும். அவை சாலட்களிலோ அல்லது சாம்பார், பொரியல் போன்ற  உணவுகளிலோ பயன்படுத்தப்படுகிறது. மேலும் ஒரு சிலர் அவற்றை பச்சையாக சாப்பிடுகிறார்கள்.

இருப்பினும், அவை தொழில்நுட்ப ரீதியாக பருப்பு வகைகள் என்பதால், பச்சையாக சாப்பிட்டால் நச்சுத்தன்மையுள்ள ஆன்டிநியூட்ரியன்கள் இருப்பதாக சிலர் கவலைப்படுகிறார்கள்.  மற்றவர்கள் பீன்ஸை சமைக்காமல் உண்பதே  ஆரோக்கியமானது என்று கூறுகிறார்கள். ஏனெனில் அவற்றை சமைப்பதால் ஊட்டச்சத்து இழப்பு ஏற்படுகிறது. இந்த பதிவில்  நீங்கள் பச்சை பீன்ஸை சமைக்காமல் சாப்பிடலாமா என்பதை பற்றி பார்ப்போம்.

சமைக்காத பச்சை பீன்ஸை ஏன் தவிர்க்க வேண்டும்?

பெரும்பாலான பீன்ஸ்களைப் போலவே, சமைக்கப்படாத பச்சை பீன்ஸ்களிலும் லெக்டின்கள் உள்ளன. இது ஒரு புரதமாகும். இது தாவரங்களுக்கு ஒரு பூஞ்சை காளான் மற்றும் இயற்கை பூச்சிக்கொல்லியாக செயல்படுகிறது. 

ஆனாலும், நீங்கள் அவற்றை சாப்பிட்டால், லெக்டின்கள் செரிமான நொதிகளை எதிர்க்கின்றன. இதனால், அவை உங்கள் செரிமான அமைப்பில் உள்ள உயிரணுக்களின் மேற்பரப்பில் பிணைக்கப்பட்டு, குமட்டல், வயிற்றுப்போக்கு, வாந்தி போன்றவற்றையும் அதிக அளவு உட்கொண்டால் வீக்கம் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகின்றன. 

அவை உங்கள் குடல் அணுக்களை சேதப்படுத்தலாம் மற்றும் உங்கள் குடலிற்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்களையும் பாதிக்கலாம். மேலும், அவை ஊட்டச்சத்து செரிமானம் மற்றும் உறிஞ்சுதலில் தலையிடுகின்றன.  அதனால்தான் அவை ஆன்டிநியூட்ரியண்ட்ஸ் என்று அழைக்கப்படுகின்றன.

ஒரு சில பீன்ஸ் வகைகளில் மற்றவைகளை விட அதிக அளவு லெக்டினைக் கொண்டுள்ளன. அதாவது அதனை பச்சையாக சாப்பிடுவதினால் எந்த பாதிப்பும் ஏற்படாது. 

ஆகவே, சிறிய அளவிலான சமைக்கப்படாத பச்சை பீன்ஸ் சாப்பிடுவது பாதுகாப்பாக இருக்கும்போது, ​​எந்தவொரு நச்சுத்தன்மையையும் முழுமையாக தடுக்க அவற்றைத் தவிர்ப்பது நல்லது.

பச்சை பீன்ஸ் சமைப்பதன் நன்மைகள்:

பச்சை பீன்ஸ் சமைப்பது ஊட்டச்சத்து இழப்புக்கு வழிவகுக்கிறது என்று சிலர் கூறுகின்றனர். உண்மையில், சமைப்பது முறையே பிறப்பு அசாதாரணங்கள் மற்றும் அணுக்களின் சேதங்களைத் தடுக்க உதவும் ஃபோலேட் மற்றும் வைட்டமின் C போன்ற சில நீரில் கரையக்கூடிய வைட்டமின்களை  குறைக்கலாம். 

இருப்பினும், இதனை  சமைப்பதினால் மேம்பட்ட சுவை, செரிமானம் மற்றும் பல்வேறு நன்மைகளையும் வழங்குகிறது. மேலும், சமைக்காத பச்சை பீன்ஸ்களில் உள்ள பெரும்பாலான லெக்டின்கள் 212 ° F (100 ° C) இல் வேகவைக்கும்போது அல்லது சமைக்கும்போது செயலிழக்கப்படுகின்றன.

பச்சை பீன்ஸ் சமைப்பதால் ஆக்ஸிஜனேற்ற உள்ளடக்கம் அதிகரிக்கக்கூடும் என்று ஆராய்ச்சி காட்டுகிறது.  குறிப்பாக பீட்டா கரோட்டின், லுடீன் மற்றும் ஜீயாக்சாண்டின் போன்ற சக்திவாய்ந்த கரோட்டினாய்டுகளின் அளவு அதிகரிக்கும்.

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உங்கள் அணுக்களை ஃப்ரீ ராடிக்கல் எனப்படும் நிலையற்ற நச்சுக்களிலிருந்து பாதுகாக்கின்றன. ஒட்டுமொத்தமாக, இந்த காய்கறியை சமைப்பதன் நன்மைகள் தீங்குகளை விட அதிகமாக இருக்கும்.

பச்சை பீன்ஸை சமைக்காமல் சாப்பிடுவதால் குமட்டல், வயிற்றுப்போக்கு, வீக்கம் மற்றும் வாந்தியெடுத்தல் ஆகியவை அவற்றின் லெக்டின் உள்ளடக்கம் காரணமாக இருக்கலாம். ஆகவே, சமைக்கப்படாத பச்சை பீன்ஸை தவிர்ப்பது நல்லது.

Leave a Reply