அரிசி உணவு அதிகமாக சாப்பிட்டால் நீரிழிவு நோய் ஏற்படுமாம்…. குண்டை தூக்கி போடும் சமீபத்திய ஆய்வு!!!

11 September 2020, 8:13 pm
Quick Share

முன்பு ஒரு காலத்தில் பணக்கார நோயாக இருந்த நீரிழிவு நோயானது தற்போது பாரபட்சம் பாராமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தாக்கி வருகிறது. பல நபர்கள் இந்த நோயை கண்டு அஞ்சி நடுங்கி கொண்டிருக்கும் இந்த வேலையில் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல ஒரு ஆய்வு முடிவு ஒன்று கிடைத்துள்ளது. அது குறித்து விரிவாக இந்த பதிவில் பார்ப்போம். 

21 நாடுகள் ஒன்று கூடி ‘பிராஸ்பெக்டிவ் அர்பன் ரூரல் எபிடெமியாலஜி’ என்ற தலைப்பில் ஆய்வு ஒன்றை நடத்தினர். இந்த ஆய்வில் பத்து ஆண்டுகளாக அரிசி சாப்பிட்டு வந்த 21 நாடுகளை சேர்ந்த 1,32, 373 நபர்களை பகுப்பாய்வு செய்தனர். இதில் இந்தியா, சீனா, தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளை சேர்ந்த 35 முதல் 70 வயது வரையிலான நபர்கள் பங்கு கொண்டனர். 

இந்த ஆய்வின் முடிவில் ஒரு அதிர்ச்சிகரமான விஷயம் ஒன்று தெரிய வந்துள்ளது. அதாவது அரிசியை அதிகப்படியாக உட்கொள்பவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் அதிகமாக இருப்பதாக இந்த ஆய்வு முடிவு சொல்கிறது. அதிலும் குறிப்பாக தெற்கு ஆசியா பகுதியை சேர்ந்தவர்களுக்கு இந்த ஆபத்து அதிக அளவில் இருந்துள்ளது. 

பிற கண்டங்களில் ஆபத்து நடுத்தரமாக காணப்பட்டது. ‘டயாபெட்டிஸ் கேர்’ என்ற இதழில் இந்த ஆய்வு முடிவானது வெளியாகி உள்ளது. மேலும் 2012 ஆம் ஆண்டில் நடைப்பெற்ற இதே போன்ற ஒரு ஆய்வின் முடிவில் தினமும் ஒரு கப் சாதம் சாப்பிட்டவர்களில் 11 சதவீதம் நபர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்பட்டுள்ளதை கண்டுபிடித்துள்ளனர். இந்த ஆய்வானது ‘ஹார்வர்டு ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த்’ சார்பாக நடத்தப்பட்டது ஆகும். 

Views: - 14

0

0