செம டேஸ்ட்டா இருக்கேன்னு வயிறு முட்ட சாப்பிட்டால் என்னென்ன பிரச்சினையெல்லாம் ஏற்படும் தெரியுமா?

8 July 2021, 10:13 am
effects of eating too much food
Quick Share

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழி பழங்காலத்தொட்டே வழக்கத்தில் இருந்து வருகிறது. இதன் அர்த்தம் புரிந்தாலே வாழ்க்கை ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் மாறும் என்றும் பல அறிஞர்கள் சொல்வதுண்டு. 

ஆம், உயிர் காக்கும் அமிர்தமே ஆனாலும் அதை அளவோடு தான் சாப்பிட வேண்டும். அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால் அதுவே நமக்கு நஞ்சு ஆகிவிடும். எனவே, இந்த பழமொழியின் அடிப்படையில் அளவுக்கு மீறி சாப்பிடுவதால் என்னென்ன பிரச்சினையெல்லாம் ஏற்படுகிறது என்பதை இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.

எப்போதாவது அதிகமாக  சாப்பிட்டால் சாதாரண ஜீரண கோளாறு மட்டுமே ஏற்பட வாய்ப்புண்டு. ஆனால் தொடர்ந்து அதிகமாக சாப்பிட்டால் பல பிரச்சினைகள் ஏற்படக்கூடும். அவை என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

தூக்கம் வராது: தொடர்ந்து அதிகமாக உணவு எடுத்துக்கொள்ளும்போது செரிமானம் ஆக அதிக நேரம் ஆகும். இதனால் தூக்க முறை பாதிக்கப்படும். படுத்தால் நெஞ்சுக்கரிப்பு, எதுக்களிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடும். இதனால் நிம்மதியாக தூங்க முடியாது.

நீரிழவு நோய் ஏற்படக்கூடும்: தொடர்ச்சியாக அதிகப்படியான உணவை எடுத்துக்கொள்வது அதிக உடல் எடை உண்டாக வாய்ப்பாகும். இதனால் அதிகமாக உணவை எடுத்துக்கொண்டு உடல் எடைக் கூடும்போது, இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த முடியாமல் டைப் 2 நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்புண்டு. 

இதய நோய்கள் ஏற்படக்கூடும்: தொடர்ச்சியாக அதிகமாக சாப்பிடுதால் உடல் எடைக்கூடும்போது உடலின் மன அழுத்த ஹார்மோன் அதிகமாக வெளியாகக்கூடும் அது மட்டுமில்லாமல் கொலஸ்ட்ரால் அதிகமாகக்கூடும் என்பதால் இதய துடிப்பு மற்றும் இரத்த அழுத்த அளவு அதிகமாகும். இதனால் மாரடைப்பு ஏற்படும் அபாயமும் அதிகரிக்கும்.

மூளையின் செயல்பாடு பாதிப்படையும்: அதிக கலோரிகள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வதை நினைவாற்றல் சீர்குலையும். அது மட்டுமில்லாமல் மூளை செயல்பாட்டை ஊக்குவிக்கும் ஹார்மோனின் உற்பத்தி தடைபடும்.

மேற்சொன்ன விளைவுகள் மட்டுமல்லாமல், உடல் எடை அதிகரிப்பு, உடல் தோற்றத்தில் மாற்றம், மலச்சிக்கல், சோம்பல், மறதி போன்ற பல பிரச்சினைகளும்  ஏற்படக்கூடும். 

எனவே உணவை ருசிக்கு சாப்பிடாமல் பசிக்கு சாப்பிட்டால் உணவின் சுவையும் நன்றாக இருக்கும், உடலின் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். 

Views: - 190

1

0