முட்டையை ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிடக்கூடாதாம்…ஏன் என்று தெரியுமா உங்களுக்கு…???

30 November 2020, 6:21 pm
Quick Share

தினமும் ஒரு முட்டை சாப்பிடுவதினால் ஏற்படும் நன்மைகள் குறித்து நாம் நன்கு அறிவோம். புரதம் மற்றும் கால்சியம் முட்டையில் அதிக அளவில் உள்ளது. தினமும் முட்டையை நம் உணவில் சேர்த்து வருவதால் அதனை அதிக அளவில் வாங்கி குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைக்கிறோம். குளிர்சாதன பெட்டியில் முட்டை வைப்பதற்காகவே தனி இடமே உள்ளது. இதெல்லாம் ஓகே தான் என்றாலும் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்படும் முட்டையை சாப்பிடுவது உடலுக்கு நல்லதா என்ற பெரிய கேள்வி பல ஆண்டுகளாகவே இருந்து வந்தது. 

இந்த கேள்விக்கான பதிலை கண்டுபிடிக்க இது குறித்து ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குளிர்சாதன பெட்டியில் வைத்து எடுத்து கொள்ளப்படும் முட்டை முற்றிலுமாக உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என ஆய்வு முடிவு கூறுகிறது. குளிர்ந்த வெப்பநிலை மற்றும் அறை வெப்பநிலையில் சேமித்து வைக்கப்படும் முட்டைகள் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும். 

மேலும் குளிர்ந்த வெப்பநிலையில் இருக்கும் முட்டைகளின் ஓட்டில் பாக்டீரியா வளர்ச்சியானது நடைபெறுகிறது. இந்த பாக்டீரியாவானது முட்டையில் இருக்கும் கருவிலும் பரவக்கூடும். இத்தகைய பாக்டீரியா பாதிக்கப்பட்ட முட்டை ஆரோக்கியமற்றதாக மாறி விடுகிறது. இதனை நாம் உணணும் போது நன்மையை விட அதிக தீமை தான் ஏற்படுகிறது. 

இது மட்டும் இல்லாமல் குளிரூட்டப்பட்ட முட்டை கெட்டுப்போகாமல் இருப்பதோடு பாக்டீரியாவின் பெருக்கத்தையும் அதிகரிக்கிறது. இதனால் சால்மோனெல்லா எனப்படும் உணவு விஷத்தை பெறும் அபாயமானது உண்டாகிறது. முட்டைகளை அதிக குளிர்ந்த நிலையில் சேமிப்பது அவற்றை சாப்பிடுவதற்கே தகுதியற்றதாக மாற்றுகிறது என ஆய்வு தகவல் கூறுகிறது. 

கோழி முட்டைகளை இடும்போதே அதன் மீது சால்மோனெல்லா பாக்டீரியா உருவாவது இயல்பு தான். சாதாரண வெப்பநிலை அல்லது அறை வெப்பநிலையில் பாக்டீரியாக்களால் இனப்பெருக்கம் செய்ய முடியாது. மேலும் அவை இறந்து விடுகின்றன. ஆனால் அந்த முட்டையை நாம் குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைக்கும் போது அவற்றில் இருக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை நாம் தூண்டி விடுகிறோம். இதன் காரணமாக நமக்கு நாமே சூனியம் வைத்து கொள்ளும் நிலை உண்டாகிறது. 

எனவே இதற்கு தீர்வு என்னவென்றால் முட்டைகளை இனி அறை வெப்பநிலையில் சேமித்து வையுங்கள். இவ்வாறு சேமிக்கப்படும் முட்டைகள் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்படும் முட்டைகளை விட அதிக நாட்கள் கெடாமல் இருக்கும். இருப்பினும் முட்டைகளை நீண்ட நாட்கள் சேமித்து வைத்து உண்பதை தவிர்க்கவும். முட்டைகளை வாங்கிய ஓரிரு நாட்களுக்குள் அவற்றை சாப்பிட முயற்சி செய்யுங்கள்.

Views: - 47

0

0